செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சன் டிவி சீரியலுக்கு டஃப் கொடுக்கும் ஜீ தமிழ் 4 சீரியல்கள்.. தோற்று போய் வேடிக்கை பார்க்கும் விஜய் டிவி

Zee Tamil Serials: சன் டிவியில் கிட்டத்தட்ட 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெரும்பாலான சீரியல்களுக்கு மக்கள் பேராதரவு கொடுத்து பார்த்து வருகிறார்கள். அதனாலயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவி சீரியல் இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வியை சந்திக்கும் வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கி வருகிறது.

இதற்கிடையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக ஜீ தமிழ் சீரியல்கள் இடம் பிடித்து வருகிறது. அதிலும் சில சீரியல்கள் சன் டிவி சீரியலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மக்களின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்திருக்கிறது. அது என்ன சீரியல்கள் என்று தற்போது பார்க்கலாம்.

தீபாவின் கதையை முடித்துவிட்டு கார்த்திகை வைத்து கிராமத்து நாயகனாக புது ட்ராக்கில் கார்த்திகை தீபம் கதை தொடங்கி இருக்கிறது. இதுதான் மாஸாக இருக்கிறது என்பதற்கு ஏற்ப கார்த்திக்கு ஏற்ற மாதிரி இந்த கதை ரொம்பவே மக்களை கவர்ந்திருக்கிறது. அதிலும் சாமுண்டீஸ்வரி கொட்டத்தை அடக்கி காட்டுவேன் என்று சவால் விடும் விதமாக கார்த்திக்கின் புதிய அத்தியாயம் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது.

இதற்கு அடுத்ததாக சந்தியா ராகம் சீரியலில் மாயவை புரிந்து கொள்ளாமல் ரகுராம் மற்றும் சீனு ஒதுக்கி வருகிறார்கள். ஆனால் மாயா செய்ததற்கான பின்னணி காரணத்தை தெரிந்து கொண்ட ஜானகி, மாயாவையும் கதிரையும் ஏற்றுக்கொண்டு சப்போர்ட் செய்து வருகிறார். இதற்கிடையில் தனத்தின் மனசை மாற்றி எப்படியாவது கல்யாணம் பண்ண வேண்டும் என்று கார்த்திக் புதுசாக பிளான் போட்டு இருக்கிறார். ஆனால் அதெல்லாம் மாயா இருக்கும் வரை நடக்காது என்பதற்கு ஏற்ப ரகுராம் குடும்பத்திற்கு காவலாக நிற்கிறார்.

அடுத்ததாக அண்ணா சீரியலில், ரத்னா விரும்பி விரும்பி காதலித்து கல்யாணம் பண்ணின கல்யாணம் தோல்வியில் முடிந்ததால் விபரீதமான முடிவை எடுத்துவிட்டார். ஆனால் தன்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்து ஆளாக்கிய அண்ணனை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் எடுத்த முடிவினால் சண்முகம் மற்றும் தங்கைகளின் நிலைமை மிகவும் கவலையாக இருக்கிறது. இப்படி ஒரு அண்ணா எங்களுக்கு இல்லையே என்று ஏங்க வைக்கும் அளவிற்கு சண்முகத்தின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.

இதனை தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் மதுவின் நிலைமையே புரிந்து கொண்ட கௌதம் அவருடைய அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பி மது எதுக்காகவும் கஷ்டப்பட்டு வருத்தப்படக்கூடாது என்று கௌதம் நினைக்கிறார். அந்த வகையில் மது மற்றும் கௌதமின் புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இதெல்லாம் கெடுக்கும் விதமாக மதுவின் பழைய காதலன் அவ்வப்போது வந்து டார்ச்சர் கொடுக்கிறார். இந்த விஷயம் கௌதமுக்கு தெரிந்தாலும் மதுவிற்கு சப்போர்ட்டாக கடைசி வரை இருப்பார்.

- Advertisement -

Trending News