Connect with us
Cinemapettai

Cinemapettai

Warner-Kholi-Cinemapettai.jpg

Sports | விளையாட்டு

நெருக்கமான நட்பு தான் தோல்விக்கு காரணம்.. நட்சத்திர ஆட்டக்காரரின் பகீர் குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 289 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 302 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா சிறப்பான பங்களிப்பை அளித்து வெற்றி தேடித் தந்தனர்.

இந்த தொடரில் இந்திய, ஆஸ்திரேலிய வீரர்கள் இடையே நெருக்கமான நட்பு காணப்பட்டது. பொதுவாக ஆஸ்திரேலிய தொடர்களில் காணப்படும் சண்டை இந்த முறை காணப்படவில்லை. அதேபோல் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களிடம் ஜாலியாக பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் விளையாடினார்கள்.

ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட நட்பு காரணமாக இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களிடம் கொஞ்சம் கூட கோபத்தை காட்டவில்லை. இந்திய வீரர்கள் இப்படி கோபம் அடையாமல் இருப்பதுதான் அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஜாகிர் கான், இந்திய வீரர்களிடம் ஆக்ரோஷம் இல்லை, ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய வீரர்கள் லேசாக சீண்ட வேண்டும், அப்போது தான் போட்டியில் ஒரு விறுவிறுப்பு இருக்கும். அவ்வாறு எதுவும் போட்டியில் காணப்படவில்லை, நட்பு போற்றும் வகையில் போட்டி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

போட்டியில் சின்ன சின்ன சீண்டல்கள் இருந்தால்தான் இரு அணிகளும் ஆக்ரோஷம் அடையும், அப்படி செய்தால் இந்திய வீரர்களுக்கு ஒரு துடிப்பு உண்டாகி வெற்றி கிடைக்கும் என கூறியுள்ளார்.

இவ்வாறு பேசியுள்ள ஜாகிர் கான் பலரது எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். மேலும் பலர் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம். நட்பாகத்தான் ஆட வேண்டும் என ஜாகிர்க்கு அறிவுரை கூறியுள்ளனர்.

Zaheer-cinemapettai-1.jpg

Zaheer-cinemapettai-1.jpg

Continue Reading
To Top