சினிமாவில் மார்க்கண்டேயன் கமல் என்றால், கிரிக்கெட்டில் அது யுவராஜ் தான். மனிதர் இந்தியாவிற்காக பல முறை தனி ஆளாக நின்று ஆட்டத்தை ஜெய்துக்கொடுத்தவர். தன்னுடைய டீன் ஏஜ் வயதில் இந்தியாவிற்கு விளையாட ஆரம்பித்தவர். காயங்கள், பார்ம் அவுட், கிரிக்கெட் பாலிடிக்ஸ் , கேன்சர் , பிட்னெஸ் என்று பல தடைகளை தாண்டி மீண்டும் அணியில் இடம் பிடித்தார். இன்றும் 2019 இல் நடக்கும் உலகக்கோப்பையை மனதில் கொண்டு கடின ப்ராக்டிஸ் செய்து வருகிறார்.

கிங்ஸ் பஞ்சாப்

இந்த ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் பஞ்சாப் அணி களம் இறங்குகிறது. இந்த அணி தான் நட்சத்திர வீரரான யுவராஜை ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில் யுவராஜ் தன் வெற்றிக்கு சிங்கம் திரும்பி விட்டது என்று சொல்லும் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

The Lion Is Back???

A post shared by Team India?? (@indiancricketteam7) on