Connect with us

Cinemapettai

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் லைக்குகள் பெற்று வைரலானது யுவராஜ் சிங் பதிவிட்ட பிரியாவிடை ஸ்டேட்டஸ், வீடியோ.

Sports | விளையாட்டு

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் லைக்குகள் பெற்று வைரலானது யுவராஜ் சிங் பதிவிட்ட பிரியாவிடை ஸ்டேட்டஸ், வீடியோ.

37 வயதான இந்திய ஆள் ரௌண்டார் யுவராஜ் சிங் தான் அனைத்து வித கிரிக்கெட்டிலும் இருந்து ரிட்டையர் ஆவதாக மும்பையில் நேற்று அறிவித்தார்.

யுவராஜ் சிங் தனது காரியரில இந்தியாவிற்காக 40 டெஸ்ட்ஸ், 304 ஒ டி ஐ மற்றும் 58 டி 20 ஆடியுள்ளார். 2007 டி 20 உலகக்கோப்பை ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து உலகத்தையே தன் வசம் ஆக்கினார். 2011 உலகக்கோப்பைப் போட்டியில் 362 ரன்கள், 15 விக்கெட்டுகள், 4 மேன் ஆஃப் தி மேட்ச் விருதுகள், சிறந்த ப்ளேயர் என அசத்தினார். இது யுவராஜ் சிங்கின் அதிகபட்ச உச்சம். புற்று நோய் பாதிப்பில் சிக்கி மீண்டு வந்த அவர் தனது பழைய ஆட்டத்திறனை இழந்தார். இதனால், இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். கடைசியாக இந்திய அணியில் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் பங்கேற்றார். அதன்பின் அணியில் இருந்து முழுவதுமாக ஓரம் கட்டப்பட்டார்.

25 வருடங்களுக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன். என் வாழ்வில் அனைத்தையும் இதுவே எனக்கு தந்துள்ளது. என்னுடன் பயணித்த அனைவருக்கும் என் நன்றிகள். இந்த கிரிக்கெட் தான் எனக்கு போராட, தோல்வி என்றால் என்ன, அதை உதறித்தள்ளிவிட்டு; மீண்டும் எழுந்து முன்னேற கற்றுக்கொடுத்தது. அழகான பயணம் இது மறுபக்கத்தில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top