Connect with us

Cinemapettai

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்ற யுவராஜ் சிங்கின் அதிகபட்ச உச்சம், வீழ்ச்சி இது தான்.

Sports | விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்ற யுவராஜ் சிங்கின் அதிகபட்ச உச்சம், வீழ்ச்சி இது தான்.

37 வயதான இந்திய ஆள் ரௌண்டார் யுவராஜ் சிங் தான் அனைத்து வித கிரிக்கெட்டிலும் இருந்து ரிட்டையர் ஆவதாக மும்பையில் ப்ரெஸ்ஸிடம் சொல்லியுள்ளார்.

2000-ம் ஆண்டில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக அறிமுகமானவர் யுவராஜ் சிங். 17 ஆண்டுகள் ஆன தனது காரியரில 40 டெஸ்ட்ஸ், 304 ஒ டி ஐ மற்றும் 58 டி 20 ஆடியுள்ளார்.

அதிரடி பேட்டிங்க்கு பெயர் போன இவர், 2002 இல் நாட்வெஸ்ட் போட்டி பைனலில் கலக்கினார். 2007 டி 20 உலகக்கோப்பைப் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து உலகத்தையே தன் வசம் ஆக்கினார். மேலும் அதே ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளிலும் கலக்கினார் . கடந்த 2011 உலகக்கோப்பைப் போட்டியில் 362 ரன்கள், 15 விக்கெட்டுகள், 4 மேன் ஆஃப் தி மேட்ச் விருதுகள், சிறந்த ப்ளேயர் என அசத்தினார்.

2014 இல் இலங்கைக்கு எதிரான t 20 உலகக்கோப்பை பைனலில் 21 பாலில 11் ரன்கள் குவித்தது தான் இவரின் கிரிக்கெட் வாழ்வில் மோசமான தருணம் .

புற்று நோய் பாதிப்பில் சிக்கி மீண்டு வந்த அவர் தனது பழைய ஆட்டத்திறனை இழந்தார். இதனால், இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். கடைசியாக இந்திய அணியில் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் பங்கேற்றார். அதன்பின் அணியில் இருந்து முழுவதுமாக ஓரம் கட்டப்பட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top