Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

CSK டீம்மில் யுவராஜ் சிங்! அட்மின் பதிவிட்ட நம்பர் ட்வீட்.. அதிரிபுதிரி செய்யும் நெட்டிசன்கள்

ஐபில் டீம்களில் அதிக ரசிகர் வட்டம் உள்ள டீம்களில் மிகவும் முக்கியமானது சென்னை சூப்பர் கிங்ஸ். சமீபத்தில் சி எஸ் கே தாங்கள் வெளியேற்றும் வீரர்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளனர். காயம் காரணமாக அதிகம் அவதிப்பட்ட மோஹித் சர்மா; இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான், சாம் பில்லிங்ஸ் வேகப்பந்து வீசும் ஆல் ரவுண்டர் டேவிட் பில்லி, இளம் வீரர் துருவ் ஷோரே மற்றும் சைதன்யா பிஷனாய் ஆகியோரை ரிலீஸ் செய்தனர். ஆக வரும் ஏலத்தில் வீரர்களை எடுக்க 14.6 கோடிகளை தங்கள் வசம் வைத்துள்ளனர் சி எஸ் கே.

சென்னை அணி ட்விட்டர் பக்கத்தில் 20 ஜெர்ஸி நம்பர்களை பதிவிட்டு 2020-ம் ஆண்டு அணியில் விளையாடப்போகும் முதல் 20 வீரர்களின் பட்டியல் என அவர்களின் ஜெர்ஸி நம்பர்களை வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். ஏனெனில் சில  ஜெர்ஸியை நம்பர் யாரென தெரியாமல் குழம்பி போனார். அதிலும் 12 ஆம் நம்பர் பாத்ததும் அது யுவராஜ் தான். அவரை ஏலத்தில் எடுக்கப்போவதாக தகவல்களை பகிர்ந்தனர்.

ஆனால் 12-ம் நம்பர் ஜெர்ஸி ஜெகதீசன் நாராயணன் என்னும் இளம் வீரருடையது.

ஜெர்ஸி நம்பர் 1- முரளி விஜய், 2- மோனு சிங்,  3- சுரேஷ் ரெய்னா, 7-டோனி, 8- ஜடேஜா, 9- ராயுடு 12- ஜெகதீசன், 13- டூ பிளேசிஸ், 17- ருத்ராஜ் கெய்க்வாட், 22- லுங்கி நிகிடி, 24- கே.எம்.ஆசிப், 27- ஹர்பஜன் சிங், 31 – கரண் சர்மா, 33- வாட்சன், 47- பிராவோ, 54- ஷர்துல், 74- சாண்ட்னெர், 81- கேதார் ஜாதவ், 90- தீபக் சாஹர், 99- இம்ரான் தாஹிர். என சிஎஸ்கே வீரர்கள் அணிந்திருக்கும் ஜெர்ஸிகளை ரசிகர்கள் கண்டுபிடித்து பகிர்ந்த்தார்கள். பின்னர் தான் யுவராஜ் கிடையாது என வதந்தி அடங்கியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top