Sports | விளையாட்டு
இந்தியாவிற்காக இந்த வீரர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது – யுவராஜ் சிங்.
இந்தியா உலகக்கோப்பை வென்ற பொழுது தொடர் நாயகன் விருதை பெற்றவர் யுவராஜ். தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் டீம்மில் ஐபில் ஆடி வருகிறார். இவர் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் உலகக்கோப்பை 2019 பற்றி சொல்லிய சில விஷயங்களின் தொகுப்பே இப்பதிவு …….
“இங்கிலாந்து மற்றும் இந்தியா தான் உலகக்கோப்பை வெல்ல முதல் இரண்டு பாவரிட் அணிகள். வார்னர் மற்றும் ஸ்மித் திரும்பியதால் ஆஸ்திரேலியாவுக்கு மூன்றாவது மூன்றாவதாக வாய்ப்பு அதிகம். மேற்கிந்திய தீவுகள் சூப்பர் டீம் தான், எனினும் இன்றைய தேதியில் நான்காவது டீம் பற்றி தெரியவில்லை.” என்றார்.
மேலும் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் எனவும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
‘‘நான் பேசும்போது அவரிடம் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தேன். தற்போது அவர் பேட்டிங் செய்து வரும் நிலை மிகவும் அபாரமாக உள்ளது. இதை அப்படியே உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்வார் என நம்புகிறேன்.
அவர் அவ்வப்பொழுது சிறப்பாக பந்து வீசுகிறார். ஆனால், அவர் நெருக்கடியை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்துதான் பெர்பாமன்ஸ் அமையும். அவர் தற்பொழுது மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். எனவே இந்த உலகக்கோப்பை அவருக்கு சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்.”
Entering the Playoffs is (Q)uite a good feeling ??#OneFamily #CricketMeriJaan #MumbaiIndians #MIvSRH @hardikpandya7 pic.twitter.com/EQHiulvSGN
— Mumbai Indians (@mipaltan) May 3, 2019
“கொல்கத்தாவுக்கு எதிராக 34 பந்தில் 91 ரன்கள் அடித்து கலக்கினார். அதுவும் நான்கு சிறப்பான பௌலர்கள் வீசும் பொழுது. இதுவே பாண்டியா நல்ல பார்மில் உள்ளார் என்பதை விளக்குகிறது.” என கூறியுள்ளார் யுவராஜ்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
