Sports | விளையாட்டு
ஓய்வு பெறப்போகும் யுவராஜ்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
Published on

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்தவர் யுவராஜ் சிங், இவர் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி பெற்றதில் இவரும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். இவரை அனைவரும் பாராட்டினாலும் ஒரு காலகட்டத்தில் அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வந்தார்.
இவர் தற்பொழுது அணியில் இருந்து ஓய்வு பெறுவதற்காக பிசிசிஐ இடம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது, அது மட்டுமில்லாமல் BCCI ஒப்பந்தத்துடன் வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளிலும் கவுண்டி போட்டிகளில் விளையாட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.
அதேபோல் ஐபிஎல்-லில் மும்பை அணிக்காக இந்த ஆண்டு விளையாடியதில் 4 ஆட்டங்கள் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது, 37 வயதாகும் இவர் இனி அணியில் விளையாட இருப்பது அரிதல்ல என்பதால் இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
