fbpx
Connect with us

Cinemapettai

முறுக்கு மீசையுடன் யுவராஜ் சிங் செய்யும் செல்பி அட்டகாசம்.. லைக்ஸ் குவியும் புகைப்படங்கள்

Sports | விளையாட்டு

முறுக்கு மீசையுடன் யுவராஜ் சிங் செய்யும் செல்பி அட்டகாசம்.. லைக்ஸ் குவியும் புகைப்படங்கள்

இந்திய அணி சார்பாக எதிரணி பவுலர்களை மிரள வைத்த சிக்ஸர் நாயகன் யுவராஜ் சிங், தற்போது முறுக்கு மீசையுடன் வலம் வருகிறார். இதனால் ஹர்பஜன்சிங், இர்பான் பதானை தொடர்ந்து இவரும் சினிமாவில் நடிக்க இருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் யுவராஜ் சிங் என்றால் மிரளாத ஆட்களே கிடையாது. இந்திய அணிக்கு கிடைத்த ஆல்ரவுண்டர் பொக்கிஷம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்தவர்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இவர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த சாதனை இன்றுவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை. மேலும் பல ஆட்டங்களில் இந்திய அணிக்கு தூணாக நின்று வென்று கொடுத்தவர்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இவரது பங்களிப்பு இல்லை என்றால் இந்திய அணி சாதித்திருக்க முடியாது என்ற உண்மை அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. அதன்பிறகு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த யுவராஜ்சிங் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றார்.

பிறகு பழைய ஃபார்முக்கு திரும்ப முடியாததால் எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தற்போது தன் மனைவியுடன் முறுக்கு மீசை வைத்துக் கொண்டு ஜாலியாக சுற்றி வருகிறார் யுவராஜ் சிங்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top