Sports | விளையாட்டு
ஜோப்ரா ஆர்ச்சரை குறை சொல்லிய சோயிப் அக்தர். பங்கமாய் கலாய்த்த யுவராஜ் சிங்
ஜோப்ரா ஆர்ச்சர் வெஸ்ட் இண்டீஸ், பார்படோஸில் பிறந்தவர். எனினும் இவரின் தந்தையின் பூர்விகம் காரணமாக இங்கிலாந்துக்கு ஆடும் வாய்ப்பு அமைந்தது. 24 வயது, அதிவேக பந்துவீச்சளர். பேட்டிங்கிலும் சுமாராக ஆடும் ஆல் ரௌண்டார். இவரின் திறன் காரணமாக, உலகக்கோப்பையில் ஆடி கலக்கினார். தற்பொழுது ஜிம்மி ஆண்டர்சன் காயம் காரணமாக ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆஷஸ் 2-வது டெஸ்டில் லார்ட்ஸில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இப்போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஒரு பந்து எகிறிச் சென்று முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அவரது கழுத்தை பயங்கரமாக பதம் பார்த்ததில் சுமித் நிலைகுலைந்து கீழே சரிந்தார். மேலும் மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால், ஸ்மித்தை ஆர்சர் பெரிதும் கண்டுகொள்ளவில்லை, நம்மாட்டு சிரிப்பு சிரித்த படி நின்றார். இது பலருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியது. சிலர் அவரை குறையும் சொல்லி வந்தனர்.

Steve-Smith-and-Jofra-Archer
அந்தவகையில் தான் அக்தர் தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் ஒன்றை தட்டினார். “பவுன்சர்கள் என்பது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். ஆனால் பால் பேட்ஸ்மேனை தாக்கும் பட்சத்தில், பந்துவீச்சாளர் அவரை விசாரிக்க வேண்டும், நலம் அறிய வேண்டும். ஸ்மித் வலியில் துடித்து சமயத்தில் ஆர்ச்சர் எதுவும் செய்யாதது போல் நடந்து சென்றது சரியில்லை. நான் பந்துவீசிய நாட்களில், பேட்ஸ்மேன் மீது பந்து பட்டுவிட்டால் அவரை நோக்கி ஓடும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்” என்று பதிவிட்டார்.
Bouncers are a part & parcel of the game but whenever a bowler hits a batsman on the head and he falls, courtesy requires that the bowler must go & check on him. It was not nice of Archer to just walk away while Smith was in pain. I was always the first one to run to the batsman.
— Shoaib Akhtar (@shoaib100mph) August 18, 2019
இதற்கு தான் யுவராஜ் பதில் தட்டியுள்ளார். அதில் “ஆமாம் நீ எப்பொழுதும் செய்வாய். ஆனால் உனது வார்த்தைகள், நலமாக தானே இருக்கிறாய், ஏனென்றால் உன்னை நோக்கி இன்னும் சில பௌன்சர்கள் வர உள்ளது என்பதே.” என கிண்டலாக சொல்லியுள்ளார்.
Yes you did ! But your actual words were hope your alright mate cause there are a few more coming ?????
— yuvraj singh (@YUVSTRONG12) August 19, 2019
விளையாடும் நாட்களில் அணைத்து சேட்டையும் செய்துவிட்டு, இன்று இளம் வீரரை குறை சொன்ன அக்தருக்கு, கிண்டலாய் நல்ல பதிலடி கொடுத்துள்ளார் யுவராஜ்.
