ஒரு ஓவரில் என் மகனின் கிரிக்கெட் வாழ்கையே முடிந்தது.. யுவராஜ் அடி பற்றி பிராட் தந்தை

2007ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் யுவராஜ் சிங் மிக அற்புதமாக விளையாடி 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அடித்தார். அதுமட்டுமில்லாமல் 12 பந்துகளில் அரை சதம் அடித்த சாதனையை தற்போது வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை.

இந்த போட்டிக்குப் பின்னர் யுவராஜ் சிங் அளித்த பேட்டியில் தன்னை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் கோபப்படுத்தியதாகவும் அதனால் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் அதிகரித்தது, கோபத்தில் ஸ்டூவர்ட் பிராடின் பந்துகளில் 6 சிக்சர்களை அடித்தேன் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் இதற்கு முந்தின போட்டியில் மஸ்கர்னாஸ் ஐந்து சிக்சர்கள் அடித்து இருப்பார் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் அடித்தேன் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று இவர் பேட்டியில் தெரிவித்திருப்பார்.

பின்னர் ஸ்டூவர்ட் பிராடின் தந்தை கிறிஸ் பிராட் என்னிடம் வந்து பேசிய போது எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டாய் உன்னுடைய ஜெர்ஸியில் அவனுக்கு கையெழுத்திட்டு தருவாயா என்று கேட்டுக் கொண்டாராம்.

இதனால் இந்திய அணியின் என்னுடைய ஜெர்சியில் கையெழுத்திட்டு கொடுத்ததாக யுவராஜ்சிங் ரகசியத்தை உடைத்துள்ளார்.

இதில் முக்கியமானது என்னவென்றால் இந்த போட்டிக்கு ஸ்டூவர்ட் பிராடின் தந்தை கிறிஸ் பிராட் தான் மூன்றாவது நடுவராக இருந்தாராம். கேட்பதற்கே மெய்சிலிர்க்க வைத்த இந்த செய்தி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment