News | செய்திகள்
U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நான் சிறப்பாக விளையாடியது ‘யுவராஜ் சிங்க்’ கொடுத்த டிப்ஸ் தான் காரணம்!
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தில் நடைபெற்றன. இந்த போட்டியில் இந்தியா ஒரு தோல்வியை குட சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்றது.

u19 world cup winner 2018
இந்தியா கிரிகெட்டின் சுவர் என்று அழைக்கப்படும் ‘ராகுல் டிரவிட்’ U19 பயிற்சியாளராக செய்ப்பட்டுள்ளார். டிரவிட்டின் திறமை மற்றும் அவருடிய செயல்திறன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

u19 world cup winner
இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஷுப்மான் கில் செயல்பட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷுப்மான் கில் இவர் நான்கு போட்டிகள் விளையாடி 282 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

u19 world cup winner
இவர் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் 54 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 94 பந்தில் 102 ரன்களும், இறுதி ஆட்டத்தில் 30 பந்தில் 31 ரன்களும் அடித்தார்.

gill
உலகக்கோப்பை தொடரில் நான் சிறப்பாக விளையாடியது யுவராஜ் சிங் அளித்த டிப்ஸ்தான் காரணம் என ஷுப்மான் கில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் நான் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டபோது யுவராஜ் சிங் எனக்கு ஏராளமான வகையில் அறிவுரை வழங்கினார். அவர் பல நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். மைதானத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை விளக்கினார்.

yuvraj singh
மேலும் என்னுடன் பேட்டிங் செய்து அறிவுரைகளை சொல்லிகொடுத்தார். இவர் கொடுத்த அறவுரை எனக்கு உலகக்கோப்பை தொடரில் சாதிக்க பெரிதும் உதவியாக இருந்தது என்றார். ஷுப்மன் கில்லை ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டின் மூலம் மேலும் என்னுடிய திறமையை வெளிபடுத்த உள்ளேன்.
