Connect with us
Cinemapettai

Cinemapettai

என் பயோபிக்கில் இவர் நடித்தால் கெத்தாக இருக்கும்.. யுவராஜ் சிங் கை காமிச்ச நடிகர்

yuvaraj-1

Sports | விளையாட்டு

என் பயோபிக்கில் இவர் நடித்தால் கெத்தாக இருக்கும்.. யுவராஜ் சிங் கை காமிச்ச நடிகர்

உலகத்திலே சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் மட்டும்தான் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்குவது ட்ரெண்டாகி விட்டது.

தல தோனி, சச்சின் டெண்டுல்கர் தற்போது கபில் தேவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ரன்வீர் சிங் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல இன்றைய பெண்கள் கிரிக்கெட் அணியில் பல சாதனை படைத்த மிதாலி ராஜன் பயோகிராபில் டாப்சி நடத்தி வருகிறார்.

2000ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான யுவராஜ் சிங் 2017 வரை விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 மற்றும் 2011 ஒரு நாள் உலகக் கோப்பைகளில் அணிக்கு பெரும் பலமாக இருந்து வெற்றி கண்டனர். இவர் பவுலிங், பில்டிங், பேட்டிங் என அனைத்திலும் கிங் மேக்கர் என்றே கூறலாம்.

தற்போது யுவராஜ் சிங் தனது பயோகிராபி நடிப்பதாக இருந்தால் 2019-ல் வெளிவந்த ‘Gully boy’ என்ற ஆங்கில படத்தில் நடித்த சித்தாந்த் சதுர்வேதி நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இவர் நடிப்பை பார்ப்பதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று மற்ற நடிகர்களை பொறாமைப்படும் அளவிற்கு தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் சிறிது காலங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது நன்கு குணமடைந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். யுவராஜ் எதிர்பார்த்தபடி நடந்தால் கண்டிப்பாக  ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

yuvaraj

yuvaraj

மற்றொருபுறம் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது பிரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார், இதில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடித்து வருகிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top