Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த சம்பவத்தால் தற்கொலைக்கு முயன்ற யுவன் சங்கர் ராஜா.. அவரே கூறிய உண்மை

இசைஞானி இளையராஜாவின் தவப்புதல்வனான யுவன் சங்கர் ராஜா தற்போதுள்ள இளைஞர்களின் இசை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவருடைய ஒவ்வொரு பாடல்களிலும் ஒரு உயிர் இருக்கும்.
அனைத்து விதமான பாடல்களிலும் கைதேர்ந்தவர். ரசிகர்கள் இவரை செல்லமாக லிட்டில் மேஸ்ட்ரோ என்று அழைப்பார்கள். இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜா இசை பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.
இதனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த வண்ணம் இருந்தன. தன்னுடைய அண்ணனான வெங்கட்பிரபுவின் பட வாய்ப்புகள் மட்டுமே வந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
அப்போது மிகவும் மன வேதனைக்குள்ளான யுவன் சங்கர் ராஜாவுக்கு தற்கொலைக்கு முயற்சி செய்யலாமா எனும் அளவுக்கு அவருக்கு யோசனைகள் வந்ததாம். மன அழுத்தம் காரணமாக ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தாராம்.
பின்னர் உடனடியாக இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகுதான் அவரது வாழ்க்கையில் அமைதி நிலவியதாம்.
மேலும் தற்போது இசையில் மீண்டும் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதற்கு மன அமைதியை காரணம் எனவும் சமீபத்திய நேரலையில் தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
