fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் உடன் இருக்கும் புதிய புகைப்படத்தை பதிவிட்ட யுவன்.. வெறித்தனமாக தயாராகும் அடுத்த காம்போ

yuvan shankar raja vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் உடன் இருக்கும் புதிய புகைப்படத்தை பதிவிட்ட யுவன்.. வெறித்தனமாக தயாராகும் அடுத்த காம்போ

பீஸ்ட் படத்தின் சூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் இளையதளபதி விஜய். அவரது வீட்டில் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் விஜய் கைகோர்த்துள்ளார். இந்தப்படத்தில் இசையமைப்பாளர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அஜித்தின் வலிமை படத்தில் தற்போது யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகளும், பின்னணி இசை உள்ளிட்ட பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படத்தின் மூன்று சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, தளபதி விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் மற்றும் யுவன் கூட்டணியில் உருவாகி வெற்றி பெற்ற படம் புதிய கீதை.

கே பி ஜெகன் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான இப்படத்தில் பாடல்கள் மட்டும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியிருந்தது. இப்படத்தின் பின்னணி இசை யுவனின் சகோதரர் கார்த்திக் ராஜா செய்திருந்தார். பிறகு மாஸ்டர் படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியிருந்தார்.

yuvan shankar raja vijay

yuvan shankar raja vijay

தளபதி விஜய்யின் ரசிகர்கள் பெரும்பாலும் யுவனின் ரசிகர்களாக உள்ளார்கள். மீண்டும் இவர்களது கூட்டணிக்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது டுவிட்டரில் யுவன் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் உள்ளார்கள். தற்போது விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் ஜனவரி 1ல் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இது விஜயின் 66 வது படமாகும். விஜயின் 66 படத்தில் யுவன் இசையமைக்க உள்ளாரா, இல்லை விஜயுடன் வேறு ஒரு புதிய படத்தில் இசையமைக்க உள்ளாரா என்பது தெரியவில்லை. ஆனால் யுவனின் பின்னணி இசையில் விஜயை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top