yuvan-shankar-raja
yuvan-shankar-raja

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் யுவன் சங்கர் ராஜா இவர் இசையமைத்த பாடல் அனைத்துமே மாபெரும் வெற்றி கண்டுள்ளன. யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் பியார் பிரேமா காதல்  படம் நல்ல வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல் இவருக்கு ஒரு தயாரிப்பாளர் எனவும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த படத்தை அடுத்து அதே இயக்குனருடன் இன்னொரு படத்தையும் தயாரிக்க போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  யுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..
yuvan shankar raja
yuvan shankar raja

யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இசையமைத்த சண்டக்கோழி  படத்தில் இடம்பெற்றுள்ள கம்பத்து பொண்ணு என்னும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது, இவரது இசைக்கு ரசிகர்களும் ஆதரவு தருவது போல் லிங்குசாமி, விஷ்ணுவர்தன் போன்ற இயக்குனர்களும் தொடர்ந்த அவரது படங்களுக்கு வாய்ப்பு தந்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இரும்புத்திரை படம் 100 நாள் வெற்றியை கண்டது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் விஷ்ணுவர்த்தன் படத்திற்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். ராம், சிவா மனசுல சக்தி போன்ற படங்களுக்கு இசை அமைத்தார். அதையடுத்து இப்பொழுது ஜீவாவின் புதிய படத்திற்கு இசை அமைப்பதற்காக கமிட்டாகியுள்ளார். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் புதிய படத்திற்கும் இசையமைப்பதாக கூறியுள்ளார்.