சிம்புவுடன் சேர்ந்து “தப்பு பண்ணிட்டேன்” ட்விட்டரில் கூறிய யுவன் ஷங்கர் ராஜா.!

தமிழ் சினிமா வட்டாரத்தில் நடிகர்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வருவது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் நடிகர் சிம்புவும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன், சிலம்பாட்டம், வல்லவன் உள்ளிட்ட படங்களுக்கு யுவன் இசை அமைத்திருந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்திற்கும் யுவன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா தனது புதிய ஆல்பம் பாடல் குறித்த அறிவிப்பை டிவிட்டர் பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். ‘தப்பு பண்ணிட்டேன்’ என்கிற இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார்.

பாடலில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் இருவரும் நடித்துள்ளனர். மேலும்,இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் சாண்டி நடனம் அமைத்துள்ளார். விரைவில் பாடலின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, யுவன் கம்போவில் இதுவரை வெளிவந்த அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த பாடலுக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

simbu-cinemapettai
simbu-cinemapettai

பாட்டோட டைட்டிலே விவகாரமா இருக்கே…? சர்ச்சைக்கு பெயர் போன சிம்பு இதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்காமல் இருந்தால் சரிதான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்