Tamil Cinema News | சினிமா செய்திகள்
யுவன் சங்கர் ராஜாவுக்கு அஜித்தின் இந்த படம் மட்டும்தான் பிடிக்குமாம்.. என்ன இப்படி சொல்லிட்டீங்க
தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். இவரது திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ்நாடே திருவிழாக் கோலம் ஆகிவிடும். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்.
தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். எப்போது வலிமைப்படுத்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என தல ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டுள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா தான் அஜித்துக்கு ஆஸ்தான இசையமைப்பாளர் என்று சொல்லலாம். இவர் இசையமைப்பில் வெளிவந்த பில்லா ஏகன் ஆரம்பம் மங்காத்தா ஆகிய படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் அவ்வளவு அருமையாக இருக்கும்.
அதனால்தான் தற்போது தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றி வருகிறார். ஏற்கனவே படத்தின் இயக்குனர் வினோத் வலிமை படம் இன்னொரு மங்காத்தாவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது ரசிகர்களை செமையாக உசுப்பேத்தி உள்ளது.
இந்நிலையில் தல அஜித் நடித்த படத்திலேயே தனக்கு நேர்கொண்ட பார்வை படம் தான் பிடிக்கும் என யுவன் சங்கர் ராஜா ஒரு பேட்டியில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித்துக்கு பல படங்களில் இசை அமைத்தாலும் நேர்கொண்ட பார்வை படம் தனது ஸ்பெஷல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹீரோ என்ஜிகே போன்ற படங்களும் தன்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான படங்கள் என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.
