கடந்த 16ம் தேதி ஏ.ஆர். ரகுமானின் நெஞ்சே எழு இசை நிகழ்ச்சி பலத்த வரவேற்புக்கு மத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து கோவையிலும் ஜனவரி 23ம் தேதி நடக்க இருக்கிறது. இதன் காரணமாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறுகையில், யார்ஸ் மீடியா நெட் வொர்க் என்கிற எங்கள் நிறுவனம் மூலம் வாய்ஸ் ஆப் யுவன் இசை நிகழ்ச்சி கோவையில் ஜனவரி 23ம் தேதியும், மதுரையில் 26ம் தேதியும் நடக்க இருந்தது,அதே தேதிகளில் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி நடக்க இருப்பதால் மற்றுமொறு தேதியில் நடக்க உள்ளது. இசை நிகழ்ச்சியின் தேதி முடிவான பின் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.