Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷ்- செல்வராகவன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா ?
கடந்த 2011 இல் மயக்கம் என்ன படத்தில் இணைந்தது இந்த காம்போ. அதன் பின் தனுஷின் சினிமா க்ராப் ஏறுமுகம் தான், எனினும் இயக்குநல் செல்வாவின் க்ராப் இறங்குமுகம் தான். இரண்டாம் உலகம், NGK இரண்டு மட்டுமே ரிலீஸ்; அடுத்த ப்ரொஜெக்ட் கட்டாயம் ஹிட் குடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் செல்வா.
தனுஷின் அசுரன் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அடுத்ததாக சத்யா ஜோதி பிலிம்ஸின் பட்டாஸ் ரிலீஸ் ஆகும், அதுமட்டுமன்றி எனை நோக்கி பாயும் தோட்டா கிடப்பில் கிடக்கின்றது. இது தவிர்த்து கார்த்திக் சுப்புராஜின் படம் ஷூட்டிங் லண்டனில் நடக்கிறது. அதன் பின் பரியேறும் பெருமாள் – மாரி செல்வராஜ் படம், ராட்சசன் – ராம்குமார் படம் என லிஸ்ட் உள்ளது.
அதன் பின் தான் செல்வாவின் படம். கலைப்புலி தாணு தான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் தான் இசை என பலரும் எதிர்பார்த்து வந்த சூழலில், ஷான் ரோல்டன் அவர்கள் தான் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். மேலும் அவர் படத்தின் இசை கோர்க்கும் பணிகளையும் ஆரம்பித்துவிட்டார் என்றும் சொல்கின்றனர்.

Dhanush-and-sean roldan
தனுசுடன் வி ஐ பி 2 படத்திற்கு பின் மீண்டும் இணைகிறார்.
