Connect with us

Cinemapettai

யார் வந்தா என்ன ? யார் போனால் என்ன ? அனைவரையும் ஆச்சர்யபடுத்திய யுவன்..

Cinema News | சினிமா செய்திகள்

யார் வந்தா என்ன ? யார் போனால் என்ன ? அனைவரையும் ஆச்சர்யபடுத்திய யுவன்..

இளையராஜாவின் பெருமையை காப்பாற்றும் பிள்ளையாக யுவன் போட்ட ட்யூன்கள், இன்றும் பலரின் மொபைலில் ரிப்பீட் மோடில் உள்ளது. அவரது ட்யூன்களுக்கு காத்து கிடந்தது இளைஞர்கள் கூட்டம். அதெல்லாம் ஒரு காலம். திடீரென மாயமாய் போனது அத்தனையும். தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட சருக்கல்களால் மெல்ல மெல்ல தன் இடத்தை பின் பக்கமாக நகர்த்திக் கொண்டே வந்தார் யுவன்.

யுவன் இடத்தை நிரப்ப யார் யாரோ வந்தார்கள். அனிருத், சந்தோஷ் நாராயணன், போன்றவர்களுக்கு குவிந்தது அதிர்ஷ்டம். யாரு எப்படி போனால் எனக்கென்ன என்பதை போல இருந்தார் யுவன். எல்லாம் கொஞ்ச நாளைக்குதான். நடுவில் இஸ்லாம் மதத்துக்கு போன யுவன், அதே மதத்தில் ஒருவரை மணம் முடித்த பின்பு வாழ்வில் காற்று வீசியது. ஒரு பெண் குழந்தை பிறந்தாள். மகள் பிறந்த நேரம் யுவன் திரும்பினார்.

அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைக்க துவங்கினார் யுவன். இன்று யுவனின் கைகளில் 18 படங்கள் இருப்பதாக கூறுகிறது கோடம்பாக்கம். முன்பு இவரை விட்டுப்போன திரையுலக படைப்பாளிகள் அத்தனை பேரும், திரும்பி யுவனிடமே வர ஆரம்பித்துவிட்டார்கள்.

I am back.. அப்படி பழைய ஸ்டைலில் பாட்டிசைக்க கிளம்பிவிட்ட யுவனால், இன்டஸ்ட்ரியில் நல்ல பாடல்களுக்கு எப்போதும் உத்தரவாதம் உண்டு என்பது ஒரு புறம் மகிழ்ச்சி. அந்த அந்த நடிகர்களுக்கு மட்டும் இல்ல, யுவன் ரசிகர் ரசிகைகளுக்கும் சந்தோசமே..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top