திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

இயக்குனராக களமிறங்கும் அடுத்த ராஜா வீட்டு வாரிசு.. சிம்புதான் வேண்டும் என அடம்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவர். கடந்த இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வருகிறார் யுவன்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கொண்டென்ட்டுகளை வாரி வழங்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா மார்க்கெட் காலி என்று சொன்ன பலருக்கு கோட் படம் மூலம் பதிலடி கொடுத்தார். துவக்கத்தில் இவரை அன்லக்கி ம்யூசிக் டைரக்டர் என்றெல்லாம் இவரை கூறியிருக்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு பாடலையும் பார்த்து பார்த்து செதுக்கி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் யுவன். இவர் இசையமைப்பாளாராக மட்டுமல்லாமல், படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். பியார் பிரேமா காதல் போன்ற ஒரு சில படங்களை தயாரித்த இவர், அந்த படங்களுக்கு இவரே இசையமைத்து பாட்டுக்களை வேற லெவல் ஹிட் செய்தார்.

இயக்குனர் அவதாரம்

எல்லாவற்றிலும் சகலகலா வல்லவனாக இருக்கும், யுவன் இன்னும் நடிக்க மட்டும் முயற்சி செய்யவில்லை. அவருக்கு அதில் ஆர்வமும் ஏற்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இவருக்கு சினிமாவில் பல விஷயங்களை explore செய்து பார்க்க மிகவும் பிடிக்குமாம்.

இதுவரையில், தந்தையின் பெயர் சொல்லி எந்த சலுகையும் அவர் ஆரம்பத்திலிருந்து கேட்டதில்லை. தனக்கென்று தனி முத்திரையை அவரே உருவாக்கினார். இந்த நிலையில் தற்போது புதிதாக இயக்குனர் அவதாரம் எடுக்கவிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

ஆம். இந்த தகவலை, அவர் வாயாலே சொல்லி இருக்கிறார். மேலும் அவர் இயக்க போகும், புதிய படத்தில், சிம்பு ஹீரோவாக நடிப்பார் என்றும் புது அப்டேட் ஒரு கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் காம்போ 100 சதவீத ஹிட்டுதான். அதனால், இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்-களை எதிர்நோக்கி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

- Advertisement -spot_img

Trending News