sirish simbhu yuvan

இசைஞானி இளையராஜாவின் இளைய வாரிசு யுவன். தன் 16 வயதில் 1997ஆம் ஆண்டு ‘அரவிந்தன்’ படம் மூலம் தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் ஷங்கர் ராஜா.

Ilayaraja-Yuvan Shankar Raja
ilaayaraja – yuvan

இவருக்கு துள்ளுவதோ இளமை படம் நல்ல பிரேக் த்ருவாக அமைந்தது. அடுத்தடுத்து பல வெற்றிகரமான ஆல்பங்களைக் கொடுத்து வந்து யுவனின் இசைப்பயணத்தில் கார்த்தி நடித்த ‘பிரியாணி’ திரைப்படம் அவரது 100வது படம் என்ற சாதனையைப் படைத்தது.

அதிகம் படித்தவை:  இளையராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி வழங்கும் "மேற்கு தொடர்ச்சி மலை" பட ட்ரைலர் !
yuvan

விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்துள்ள படம் இரும்புத்திரை.

irumbuthirai

விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இரும்புத்திரை’ படம் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான 125வது படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதிகம் படித்தவை:  இணையதளத்தில் கசிந்த சர்கார் படபிடிப்பில் இருந்து விஜய்யின் மாஸ் லுக் புகைப்படங்கள்.!
Irumbhuthirai AL

இந்த விழாவில்தான் ‘இரும்புத்திரை’ படம் யுவனின் 125வது படம் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.