மாயா ஒரு பஜாரி, ஆம்பளைங்களே அவ பேசுறதை பார்த்து ஓடுவாங்க.! கேவலப்படுத்திய யுகேந்திரன்

Biggboss 7: இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களிலேயே இந்த சீசன் தான் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து வருகிறது. அதிலும் பிக்பாஸ் வீட்டிற்கு நாங்கள் தான் ஓனர் என்ற நினைப்பில் மாயாவும் அவருடைய அல்லக்கைகளும் அடிக்கும் லூட்டி கொஞ்ச நெஞ்சம் கிடையாது.

இதை 24 மணி நேரமும் லைவாக பார்த்து வரும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கிழி கிழி என கிழித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கும் யுகேந்திரன், மாயா, பூர்ணிமாவின் லட்சணத்தை புட்டு புட்டு வைத்துள்ளார்.

அதிலும் மாயா பேசுவதை பார்த்தால் ஒரு பெண் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேச முடியுமா என்ற அளவுக்கு இருக்குமாம். அதேபோன்று ஆம்பளைங்களே கூச்சப்பட்டு ஓடும் அளவுக்கு காது கூச வைக்கும் வார்த்தைகளையும் அவர் அசால்டாக பேசுவாராம். சுருக்கமாக சொல்லப்போனால் அவர் ஒரு கலீஜ், பஜாரி என்று அவர் உண்மையை பட்டென்று போட்டு உடைத்துள்ளார்.

Also read: 80% வாக்குகளை கைப்பற்றிய போட்டியாளர்.. அவமானப்பட்டு பிக்பாஸை விட்டு வெளியேறப் போவது இவர் தான்

மேலும் அவருடைய ஜெராக்ஸாக இருக்கும் பூர்ணிமாவும் அவருக்கு சளைத்தவர் கிடையாது. மோசமான கமெண்ட் கொடுப்பது, கீழ்த்தரமாக ஜோக் அடிப்பது என்று இவர்கள் இருவரும் அடிக்கும் கூத்து எல்லை மீறியது என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதை எல்லாம் நாம் லைவில் பார்த்திருந்தாலும் யுகேந்திரன் சொல்வது கூடுதல் அதிர்ச்சியாக இருக்கிறது.

அது மட்டுமின்றி அவர் நான் ஒரு வேளை பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் பிரதீப்பை காப்பாற்றி இருப்பேன். ஏனென்றால் அவர்கள் பொறாமையின் காரணமாக பிரதீப் முதுகில் குத்துவது நன்றாகவே தெரிந்தது. ஆனால் துரதஷ்டவசமாக அவர் பலியாகி விட்டார் என வருத்தத்துடன் யுகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கமல் சார் மாயா செய்யும் தவறுகளை தட்டிக் கேட்காதது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் பிரதீப்புக்கு ஒரு முறையாவது பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். தற்போது அவருடைய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Also read: விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பிரதீப்.. ஆடிப்போன ஆண்டவரின் அதிரடி முடிவு