fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

4 லட்சம் பேருக்கு உடனடி அரசு வேலை கொடுக்கப்பட்டது.. மாஸ் பண்ணும் ஜெகன்மோகன் ரெட்டி

ysr-jagan-mohan-reddy

India | இந்தியா

4 லட்சம் பேருக்கு உடனடி அரசு வேலை கொடுக்கப்பட்டது.. மாஸ் பண்ணும் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் கட்சி வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக தேர்தல் வாக்குறுதிகளில் அளித்தனர். ஏற்கனவே 70 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை முடித்த ஜெகன்மோகன் ரெட்டி, அடுத்து அரசாங்க வேலையில் கவனத்தை திருப்பியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதைப் போலவே 4.01 லட்சம் பேருக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியன்று இரண்டாம் தேதி அனைவரும் வேலையில் சேர்கின்றனர்.

மேலும் புதுமையான முறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வழங்கி வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. கிராமங்களில் வாழும் 4000 பேருக்கு ஒரு கிராம தலைமை செயலகம் அமைக்கப்பட்டு அந்த கிராமங்களில் 50 வீட்டுக்கு ஒரு தன்னார்வ தொண்டர்கள் வைத்து வேலை வழங்கி வருகிறது. அவர்கள் மக்களுக்கு தேவையான ரே‌ஷன் கார்டு உள்ளிட்ட அரசு நலத்திட்ட தேவைகளை அந்தந்த துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

இதற்கு பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தால் போதும் அவர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் முதல் சம்பளமாக வழங்கப்படுகிறது. நகரங்களில், அமைக்கப்படும் நகர தலைமை செயலகத்தில் பணி புரிய இருக்கும் தன்னார்வ தொண்டர்களுக்கு ரூ15000 சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top