Tamil Cinema News | சினிமா செய்திகள்
கடந்த சில நாட்களாக இந்திய அளவில் youtube-ல் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமிழ் பாடல்.!
தமிழ் சினிமாவில் தற்பொழுது ரிலீஸ் ஆகும் பாடல்கள் அனைத்தும் இணையதளத்தை அதிரவைக்கிறது ஒவ்வொரு பாடல்களும் மில்லியன் கணக்கில் ஹிட் ஆகி வருகிறது, அதுவும் கடந்த 10 நாட்களாக youtube-ல் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருப்பது தமிழ் பாடல்கள் தான் அந்த வகையில் சமீபத்தில் ஹிட்டான தமிழ் பாடல்களை இப்பொழுது பார்க்கலாம்.
ரவுடி பேபி
இந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் என்றால் தனுஷ் நடித்துள்ள மாரி-2 படத்தின் பாடல்தான், இசையமைப்பாளர் யுவன் நீண்ட வருடங்களாக இப்படி ஒரு ஹிட் பாட்டிற்காக தான் காத்திருந்தார் அதிலும் இந்த பாடலில் பெண் குரல் தீவாய்ஸ் செம்ம ஹிட் ஆகியுள்ளது, இந்த பாடலை tiktok ஆப்களில் பல பெண்கள் பாடி மகிழ்ந்து உள்ளார்கள் இதுவரை இந்த பாடல் 20 மில்லியன் கடந்துள்ளது.
மரண மாஸ்
அடுத்ததாக யூட்யூபில் பிரமாண்ட ஹிட்டில் இருப்பது ரஜினி நடித்துள்ள பேட்டை படத்தில் மரண மாஸ் பாடல் தான் ரஜினி படத்தில் இப்படி ஒரு குத்து பாடலை கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது அப்படி ஒரு எனர்ஜி அனிருத் பட்டையைக் கிளப்பி விட்டார் இந்த பாடல் இதுவரை 16 மில்லியனை கடந்துள்ளது.
அடிச்சு தூக்கு
தல அஜித்தை எப்பொழுது தியேட்டரில் பார்க்க போகிறோம் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இமான் கொடுத்த விருந்து தான் அடிச்சு தூக்கு பாடல் இந்தப் பாடல் வெளிவந்த சில நாட்களே ஆன நிலையில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது இதுவரை இந்த பாடல் 8.6 மில்லியனை கடந்துள்ளது.
