சோசியல் மீடியா மூலம் அனைவரின் கவனத்தையும் திருப்பி பிரபல யூடியூப்பராக வலம் வருபவர் தான் இர்ஃபான். இவர் சொந்தமாக இர்ஃபான் வியூ என்கிற யூடியூப் சேனலை 35 லட்சத்துக்கு அதிகமான சப்ஸ்க்ரைபர் வைத்திருக்கிறார். இவருடைய முக்கியமான வேலையே பல்வேறு இடங்களுக்கு சென்று விதவிதமான உணவுகளை சுவைத்து அதனை விமர்சித்து வீடியோவை பதிவிட்டு போடுவது தான்.
அப்படிப்பட்ட இவருடைய திருமணம் சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் கோலாக்கலமாக நடைபெற்றது. இதனை ஒவ்வொரு நிகழ்ச்சியாக வைத்து பல செலிப்ரட்டிகளை அழைத்து மிக விமர்சனமாக கொண்டாடினார். அதையும் வீடியோவாக வெளியிட்டுக் கொண்டே வந்தார்.
Also read: ஒரே படத்தில் நடிகைகளை மயக்கிய ஹீரோக்கள்.. திருமணம் செய்த 5 நட்சத்திர ஜோடிகள்
அந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது என்ன எல்லாத்தையும் வீடியோவில் போட்டு வருகிறான். என்று வாய்க்கு வந்தபடி திட்டும் அளவிற்கு வீடியோவை போட்டு குவித்தார். இவர் ஒன்னும் அந்த அளவுக்கு பெரிய ஆளும் கிடையாது. சும்மா டீ பார்ட்டி நடக்கிறது, மெஹந்தி பங்க்ஷன், சாப்பிடுறது, ஊட்டி விடறது எல்லாத்தையும் அப்பட்டமாக சமூக வலைதளங்களில் போட்டு விட்டார்.
இவருடைய அக்கப்போரை தாங்க முடியலையே என்று கடுப்பாகி விமர்சித்து வந்தார்கள். அத்துடன் இவர் மனைவி குடும்பத்துடன் அடித்த லூட்டியையும் டெலிகாஸ்ட் பண்ணாரு. இதை பார்க்கும்போது ரொம்பவே ஓவராக தான் ஆட்டம் போடுகிறார் என்று சொல்லும் அளவிற்கு இவருடைய அக்கப்போர் இருந்தது.
Also read: விஜய்யை நம்ப வைத்து கழுத்தறுத்த இயக்குனர்.. கேஜிஎஃப் நடிகரை வைத்து காய் நகர்த்தும் சன் பிக்சர்ஸ்
இப்படி இவரை பற்றி விமர்சித்ததுனால என்னமோ இவர் திருமணத்தின் மீது கண் பட்டுவிட்டது என்ற சொல்லலாம். தற்போது இவருடைய கார் மோதி செங்கல்பட்டு அருகே ஒரு மூதாட்டி பலியாகி உள்ளார். ஆனால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்னுடைய டிரைவர் தான் இந்த செயலை செய்தார் என கூறி இருக்கிறார்.
இவர் காரில் போகும்போது என்ன கூத்து அடித்தாரோ அதற்கு பலிகாடாக ஒரு உயிர் பலி ஆகிவிட்டது. ஏற்கனவே முதல் திருமணம் சில பிரச்சனையின் காரணமாக தடைப்பட்டு விட்டது. ஒரு வழியாக தற்போது தான் இரண்டாவது திருமணத்தை முடித்த நிலையில் இந்த சோகமான விபரீதம் இர்ஃபானை படபடக்க வைத்துள்ளது.
Also read: ராமராஜனுக்கு போட்டியாக இறங்கிய லெஜன்ட்.. அடுத்த படத்திற்கு தயாரான அண்ணாச்சியின் புகைப்படங்கள்