போலி டாக்டராக வலம் வந்த யூடியூப் சாப்பாட்டு ராமன்.. கொரானா டிப்ஸ் கொடுத்தபோது கொத்தாக மாட்டிய சோகம்

யூடியூப் போன்ற சமூக வலைதளங்களின் மூலமாக பலரும் பிரபலமாகி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் சாப்பாட்டு ராமன். குறைந்த நிமிடங்களில் அதிக அளவு உணவுகளை உண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் இவரது சாப்பாட்டு ராமன் சேனலை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் இவர் யூடியூப் சேனல் மட்டுமல்லாமல் சித்த மருத்துவமாகவும் அந்தப் பகுதியில் பிரபலமாக இருந்துள்ளார்.

மேலும் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உணவுகளை உண்டு வரும் சாப்பாட்டு ராமன் உடனடியாக ஜீரணமாக சித்த மருத்துவம் ஒன்றை வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் அரசாங்கம் முகக்கவசம், கபசுரக் குடிநீர் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட சாப்பாட்டு ராமன் தன்னுடைய சித்த மருத்துவம் கிளினிக்கில் ஆங்கில மருந்துகள் வாங்கி விற்று வந்ததாகவும், ஆங்கில மருத்துவம் பார்த்ததாகவும் தகவல்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்றுள்ளது.

இதுகுறித்து அவர்கள் விசாரிக்கையில் இவர் போலி மருத்துவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரை காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிகிறது. சித்த மருத்துவரான கொரானாவுக்கு டிப்ஸ் கொடுத்து வீடியோ போட்டதால் விபரீதமாகியுள்ளது.

saapatu-raman-cinemapettai
saapatu-raman-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்