2 மில்லியனை தொட போகும் ஏ.ஆர்.ரகுமான்.. உலக தமிழர்களை திரும்பிப் பார்க்க வைத்த தருணம்

பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார் . இவர் தற்போது தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார்.

மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்பாடல் சமூக வலைதளகளில் பெருமளவில் வரவேற்ப்பை பெற்றது .

மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.

மேலும் இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். 2 மில்லியனை தொட போகிறது இந்த பாடல், உலக தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த தருணம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்