தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை இளைஞா்கள் மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கப்போவதாக கூறப்படுகிறது.

இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்போல உருவாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றை மொத்தமாக ஹைட்ரோகார்பன்கள் என்றழைக்கிறோம்.

நாடெங்கும் சிறு சிறு அளவுகளில் ஹைட்ரோகார்பன்கள் புதைந்துள்ளன. அதை எடுக்கும் பொறுப்பை அரசு தனியார் நிறுவனங்களிடம் ஏலத்திற்கு விட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 31 நிலப்பகுதிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் 11 இடங்களும், ஆந்திர மாநிலத்தில் 4 இடங்களும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் குஜராத் மாநிலத்தில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகள் இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியில் அமைந்துள்ள ஒரு வயலை கர்நாடகாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஜெம் லெபராட்டரிக்கு மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இந்த திட்டத்தால் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகும். ஹைட்ரோகார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதனால் அல்லது புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மேலும் சிறுநீரகங்கள், மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

நிலத்தடி நீர் வறண்டு போகும், விவசாயம் பாழ்பாடும், உணவு உற்பத்திக்குறையும், இது மட்டும் அல்லாது தமிழகமே வறண்ட மாநிலமாக உருவாகும்.

இதைத் தடுக்கதான் மே17 இயக்கம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று களம் இறங்குகிறது.

இதில் இளைஞா்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

சென்னை மீண்டும் மாணவா்கள், இளைஞா்களால் குலுங்கப்போகிறது.