ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூல் சேலம் போலீசாரிடம்  ஒரு இளைஞர் டுவிட்டரில் புகார் செய்ததற்கு, அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள சலேம் மாவட்ட போலீசார் பதில் அளித்துள்ளனர்.

கொச்சியைச் சேர்ந்தவர் அருணானந்த். இவர் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஏற்காடு வந்துள்ளார். அங்கு அவர்  ஆட்டோவை வாடக்கைக்கு எடுத்தபோது, 1.5 கி.மீ செல்ல ரூ.50 கட்டணத்தை ஆட்டோ டிரைவர் கேட்டுள்ளார்.

இதனால் கடுப்பான அருணானந்த் இது குறித்து டுவிட்டரில் சேலம் போலீசுக்கு புகார் அளிக்க முடிவு செய்தார். இதற்காக ட்விட்டரில் சேலம் போலீஸ் என்ற ஐடியை டேக் செய்து புகாரை பதிவிட்டார்.

சேலம் போலீஸ் துறை அதிகாரிகளே(@SalemPoliceDept) ஏர்காட்டில் ஆட்டோ டிரைவர்கள் எப்படி கட்டணக் கொள்ளை அடிக்கிறார்கள் தெரியுமா? 1.5.கி.மீ செல்ல 50 ரூபாய் கேட்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளை கவனிக்க மாட்டீர்களா?. இதனை முறை படுத்த எதுவும் வழிமுறை செய்து இருக்கிறீர்களா ?’’ எனப் பதிவிட்டார்.

ஆனால், (@SalemPoliceDept) என்ற முகவரி, அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள சலேம் போலீஸ் துறையின் அதிகாரப்பூர்வ முகவரி அப்பொழுது அவர் அறிந்திடவில்லை.

இந்த டுவிட்டைப் பார்த்த அமெரிக்காவின் சலேம் போலீஸ் துறை, உடனே அருணானந்துக்கு டுவிட்டுக்கு பதில் அளித்தனர். “ நாங்கள் சலேம் போலீஸ் துறை, அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள சலேம் நகர்.?’’ என பதில் கூறினார்.

அதிகம் படித்தவை:  40 நடிகைகள் வேணாம் என தூக்கிபோட்ட திரைப்படத்தில் நடிக்க சம்மதித்த சதா.! அப்படி என்ன படத்தில் இருக்கு.!

இதைப்பார்த்த அருணானந்த், தனது தவறை உணர்ந்தார்.

அதன்பின் சலேம் போலீசாருக்கு அருணானந்த் பதில் அளித்து டுவிட் செய்தார், அதில் “அமெரிக்காவில் ‘சலேம்’ என்ற நகர போலீசார் இருப்பதை நான் அறிவேன். இந்தியாவின் தமிழகத்தில் ‘சேலம்’ என்று மாவட்டம் இருக்கிறது. தவறுதலாக உங்களை டேக் செய்துவிட்டேன். ஆனால், உங்களுக்கு என நினைத்து எந்த புகாரையும் அனுப்பவில்லை. எனது பதிவுக்கு உடனுக்குடன் பதில் அளித்த சலேம் போலீசாருக்கு நன்றி. வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த டுவிட்டில் அருணானந்த் “ ஓரிகன் மாநிலத்தில் மெட்ராஸ் எனும் நகரம் இருக்கிறதா? இது தமிழகத்தின் தலைநகரம் ’’ எனக் கேட்டார்.

அதற்கு சலேம் போலீசார் பதில் அளிக்கையில், “எனினும் உங்கள் பிரச்சனை தீரும் என்று நம்புகிறோம். டுவிட்டர் கணக்கு நம் சமூதத்தினர் அனைவரும் ஒன்றாக இணைவதற்கும், புரிந்து கொள்வதற்கும் நல்ல வாய்ப்பு. சலேம் சமுகத்தின் சார்பில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்தனர்.

அதிகம் படித்தவை:  கமலுடன் விக்ரம் இணையும் படத்தின் முக்கிய அப்டேட்

வாட்சப் மற்றும் ட்விட்டரில் பலரும் இதனை அதிகமா ஷேர் செய்து வருகிறார்கள்.

சேலம் போலீசாருக்கு புகார் செய்து, அமெரிக்காவின் சலேம் நகரில் இருந்து பதில் உடனடியாக வந்துவிட்டது. ஆனால் நம் சேலம் நகரில் இருந்து பதில் வருமா?