fbpx
Connect with us

நீ இன்னுமா சாகல,ஜூலியை பார்த்து கேள்வி கேட்டது யார்..!!!

News | செய்திகள்

நீ இன்னுமா சாகல,ஜூலியை பார்த்து கேள்வி கேட்டது யார்..!!!

நீ இன்னுமா சாகல? என்று பார்க்கும் பலரும் கேட்பதாக ஜூலி வேதனை தெரிவித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலமாக இல்லாமல் போட்டியாளராக பங்கேற்றவர் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி.

ஆரம்பத்தில் அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால், அவருடைய செயல்களை பார்த்த பார்வையாளர்கள் வெறுக்கத் தொடங்கினர்.அதற்கு ஏற்றார் போன்று அவர் நிறைய பொய்களை கூறி பிக் பாஸ் வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதை தொகுப்பாளர் கமல் வீடியோ மூலம் போட்டுக்காட்டினார்.

இதனால் அவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வாக்களிக்காமல் வெளியேற்றினர்.இந்நிலையில் வெளியே வந்த ஜூலி பொதுமக்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது,

நான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதிலிருந்து என்னை அனைவரும் திட்டிக்கொண்டிருக்கின்றனர். நான் என்ன விளக்கம் சொன்னாலும் அவர்கள் கேட்கக்கூடிய மனநிலையில் இல்லை.என்னை தீவிரவாதியை போன்று பார்க்கிறார்கள். நீ இன்னும் சாகலையா என்றும் சிலர் கேட்டனர். ஆரம்பத்தில் என்னோட பெற்றோர்களும் வருத்தப்பட்டாங்க. ஆனால், நான் விளக்கி கூறியதை ஏத்துக்கிட்டாங்க.

மீண்டும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தபோது எல்லோரும் என்னை பார்த்து பொய்க்காரி என்று கத்துனாங்க. அது எனக்கு ரொம்ப மனவருத்தமாக இருந்தது என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top