Sports | விளையாட்டு
15 வயதே ஆன ஸ்பின்னரை ஏலத்தில் எடுக்கப்போகும் டீம் எது? ஐபில் 2020
ஏப்ரலில் நடக்கும் கிரிக்கெட் கொண்டாட்டமான ஐபில் போட்டிகளின் ஜுரம் நவம்பர் மதம் முதலே துவங்கி விடுகிறது. வீரர்கள் ட்ரான்ஸபர், ஒப்பந்தம் கான்சல், ஏலம் என படிப்படியாக பில்ட் அப் அதிகரிக்கும்.
கங்குலி பொறுப்பேற்றுள்ள நிலையில் நடக்கும் ஐபில் தொடர் இது. டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஐபில் ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் டீம்களின் விருப்பத்துக்கு ஏற்ப வீரர்களின் பட்டியல் தற்போது 332 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள ஒரு வெளிநாட்டு வீரர் பற்றியதே இந்த பதிவு.

noor-ahmad -lakanwal
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நூர் அகமது லகன்வால் தான் அவர். இவருக்கு 14 வயது 346 நாட்கள் ஆகிறது. ஐபில் ஏலத்தில் பங்கேற்கும் குறைந்த வயது உடைய வீரர் என்ற பெருமையை தட்டி செல்கிறார்.
இடது கை மணிக்கட்டை சுழற்றி பந்துவீசும் (chinaman) திறமை படைத்த நூர் அகமது. (குலதீப் யாதவ் போல) ஆப்கானிஸ்தான் அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்று ஆடிவருகிறார். சமீபத்தில் லக்னோவில் நடந்த இந்திய யூ 19 க்கு எதிரான தொடரில் நூர் அகமது சிறப்பாகப் பந்துவீசினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவரது திறமையை கேள்விப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை அழைத்து நெட்ஸில் பந்துவீசச் சொல்லி ஆராய்ந்துள்ளனர். ஏற்கனவே ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களான ரஷீத் கான், முஜீப் ரஹ்மான், நபி போன்றவர்கள் கலக்கி வரும் சூழலில் இந்த இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா என டிசம்பர் 19 தெரிந்துவிடும்.
