Connect with us

Cinemapettai

குடும்ப தகராறில் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை.. காயத்துடன் குழந்தை மீட்பு

family-fight

Tamil Nadu | தமிழ் நாடு

குடும்ப தகராறில் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை.. காயத்துடன் குழந்தை மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 10 மாத குழந்தையுடன் தாய் ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை, சிறு காயங்களுடன் பெண் குழந்தை உயிர் தப்பியது.

ஓசூர் இரயில் நிலையம் அருகே பெங்களூர் பாதையில் தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகில் இன்று அதிகாலை 10 மாத கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று அதிகாலையில் மைசூர் நோக்கி செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் டிரைவர் ஓசூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் ரயில்வே போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நைட்டி அணிந்த நிலையில் தலை கை கால்கள் சிதறிய நிலையில் உடல் இருந்தது தெரிய வந்தது. அதே சமயம் ரயில்வே பாதையில் அதிர்ஷ்டவசமாக 10 வயது பெண் குழந்தை உயிருடன் இருந்து மீட்கப்பட்டது.

குழந்தையை மீட்ட போலீசார் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைக்கு தலையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இறந்த பெண் உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் மூக்கண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த முரளி என்பவருடைய மனைவி ஸ்வேதா வயது 22 என தெரியவந்துள்ளது .

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் ரயில் முன் பாய்ந்து ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top