Sports | விளையாட்டு
இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்கு விளையாட செல்லும் விக்கெட் கீப்பர் யார் தெரியுமா?
இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு இருக்கும் ஆர்வம் என்றுமே குறைந்தது இல்லை, அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. பல ஸ்டார் வீரர்கள், ஜாம்பவான்கள் நாம் பார்த்திருக்கிறோம், அதே நேரத்தில் கிரிக்கெட்டில் சாதிக்க துடித்து தேசிய, சர்வதேச அளவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட கதைகளும் ஏராளமோ ஏராளம் தான்.
ஸ்மிட் படேல் – குஜராத்தை சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான். 2012 இல் இந்தியா யூ 19 கோப்பையை வென்ற பொழுது வெற்றி ரன்களை அடித்தது இவர் தான். நான்கு விக்கெட் விழுந்த நிலையில், தனது கேப்டனுடன் நின்று ஆடி வெற்றியை தேடி கொடுத்தவர். இவர் தான் இந்தியாவில் பிசிசிஐ இடம் இருந்து ஒய்வு பெற்று அமெரிக்கா செல்கிறார் கிரிக்கெட் விளையாட.
பார்திவ் படேல் இருந்த காரணத்தால், குஜராத் டீம்மில் பேக் அப் கீப்பராக தான் பெரும்பாலும் இருக்க நேரிட்டது. எனவே திரிபுரா, கோவா, பரோடா என டீம்கள் மாறினார். ஐபிஎல் ஒப்பந்தமும் கிடைக்கவில்லை. 55 முதல் தர போட்டிகளில் விளையாடி 3278 ரன்கள், 40 சராசரியில் எடுத்துள்ளார். இவர் குடும்பம் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளனர். எனவே கடந்த சில ஆண்டுகளாகவே இங்கு விளையாடி விட்டு, மீதி நாட்கள் அமெரிக்காவில் தான் செலவிட்டுள்ளார்.

smit patel
அங்கு க்ரீன் கார்ட் வைத்துள்ளார், அமெரிக்காவில் நடக்கும் லீக்கில் ஆட ஒப்பந்தமும் செய்துவிட்டார். இப்பொழுது வெஸ்ட் இண்டீசில் நடக்கும் CPL போட்டிகளில் பார்படாஸ் ட்ரிடென்ட்ஸ் டீம்மில் ஆகஸ்ட் மாதம் ஆடவுள்ளார். 2022 இறுதியில் அமெரிக்கா டீமுக்கு ஆட தகுதி பெற்றுவிடுகிறார்.
இரண்டாவது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துக்கள் ப்ரோ.
