Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாய் ஜாலத்தால் கவரும் நடிகர்.. நடிகைகளை வீட்டிற்கே அழைத்து தினமும் விருந்து
தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கும் கிளுகிளுப்புக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது. அவ்வப்போது நடிகர் நடிகைகள் சில சில்மிஷங்கள் செய்து மாட்டிக் கொள்வார்கள். அந்த வகையில் தற்போது புதிதாக இணைந்துள்ளார் அந்த மினிமம் கேரண்டி நடிகர்.
சமீபத்தில் இவர் நடித்த கண்பார்வை சம்பந்தமாக வெளிவந்த படம் ஹிட் அடித்தது. அதனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தன்னுடன் நடிக்கும் இளம் நடிகைகளை தன்னுடைய இயல்பான அணுகுமுறையால் அவர்களை மயக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இவர் ஒரு தனித்த ஆள் கிடையாது. இவருடன் ஒரு கேங் எப்போதுமே இருக்கும். பெரிய இடத்துப் பிள்ளை தான் அந்த கூட்டத்திற்கு தலைவர். அந்தக் கூட்டத்தில் ஒருவரான இந்த வை நடிகர் சமீபகாலமாக தனிப்பட்ட முறையில் படங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் தனிமையில் இருக்கும் போது தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் புது நடிகையும் சேர்ந்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த இவர்களின் டீசரில் இருவரும் கட்டிப்பிடித்து களேபரம் செய்ததன் விளைவு என்றும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
