Connect with us
Cinemapettai

Cinemapettai

bala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலா படத்தில் வில்லனாக பிரபல இளம் நடிகர்.. பரதேசி பட ரேஞ்சுக்கு ஆளையே மாற்றிவிடுவாரே!

தமிழ் சினிமாவை பொருத்தவரை அழகாக இருக்க நினைக்கும் நடிகர்கள் யாருமே பாலா படத்தில் நடிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு நடிகராக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சிறிய நடிகர்கள் பாலா படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பார்கள்.

அப்படி மாட்டியவர்கள் தான் ஆர்யா, அதர்வா, ஜிவி பிரகாஷ் போன்றோர். சமீபகாலமாக பாலா படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறத் தவறி வருகிறது. இதனால் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என வெறி கொண்டு கதை எழுதி வருகிறாராம் பாலா.

அடுத்த படத்தில் தான் யார் என்பதை தமிழ் சினிமாவுக்கு நிரூபித்த ஆகவேண்டும் என தன்னுடைய வட்டாரங்களில் சவால் விட்டுக் கொண்டே வேலையை செய்து வருகிறாராம். அந்த வகையில் ஹீரோ, வில்லன் என ஒவ்வொருவருக்கும் தன்னுடைய படத்தில் பெயர் கிடைக்க வேண்டுமென உழைத்து வருகிறாராம்.

அந்த வகையில் அடுத்ததாக பாலா இரண்டு நடிகர்கள் படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. அதில் சூர்யா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் ஹீரோ யார் என்பதை முடிவு செய்வதில் தாமதம் நிலவி வருகிறது.

ஆனால் வில்லன் யார் என்பதை முடிவு செய்துவிட்டாராம் பாலா. அவர் வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வரும் அதர்வா தான். ஏற்கனவே பாலா இயக்கத்தில் அதர்வா பரதேசி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

bala-atharvaa-cinemapettai

bala-atharvaa-cinemapettai

இந்த முறை பாலா படத்தில் வில்லனாக களமிறங்க உள்ளாராம். பாலா எப்படியும் தனக்கு பெயர் சொல்லும்படி கதாபாத்திரம் கொடுப்பார் என நம்பி ஓகே சொல்லிவிட்டாராம். இதுநாள் வரை பாலாவின் பட வில்லன்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை பார்த்திருக்கிறோம். அதற்கு அதர்வா சரி வருவாரா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Continue Reading
To Top