Tamil Nadu | தமிழ் நாடு
கேவலம்.. காதலன் கேட்டானாம்.. நிர்வாண வீடியோவை அனுப்பிய இளம்பெண்.. பதற வைத்த இளைஞன்
திருப்பூர் : நிர்வாணமாக இருக்கும் வீடியோவையும், குளிக்கும் வீடியோவையும் நான்தான் செல்போனில் அந்த பெண்ணை எடுத்து அனுப்ப சொன்னேன் என்று கைதாகி உள்ள இளைஞர் வாக்குமூலம் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 19). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவருடைய ஊரைச்சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த பெண் சூலூரில் தங்கி ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இருவருமே ஒரே ஊர் என்பதால் இவர்களது நட்பு காதலாக மாறியது. பிறகு தினமும் போனில் பேச ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அதிக நெருக்கம் அதிகமானதால், நிர்வாண நிலையிலேயே செல்போனில் அந்த பெண் பேசியுள்ளாராம். கம்ப்யூட்டரில் வீடியோ கால் பேசினாலும் இப்படியே நிர்வாண நிலையில் தான் அந்த பெண் பேசுவாராம்,
தன்னை நம்பி இந்த கோலத்தில் பேசிய பெண்ணின் வீடியோக்களை மொத்தமாக சேமித்து வைத்து கொண்டே வந்த அஜித், ஒரு கட்டத்தில், டிரஸ் இல்லாமலும், குளிக்கும் போதும் வீடியோ எடுத்து அனுப்ப சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார். அந்த பெண்ணும் நம்பி இந்த வீடியோக்களை எடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், திடீரென 2 பேருக்கும் பிரச்சனை வந்திருக்கிறது. இதனால் கோபம் அடைந்த இளைஞர் பெண்ணின் நிர்வாண வீடியோக்கள் மொத்தத்தையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஏன் இப்படி செஞ்ச? என்று கண்ணீருடன் கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த இளைஞர், வெளியே அல்லது போலீசில் சொன்னால், ஆசிட் வீசி கொன்றுவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். அதனால் வீட்டில் பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார் அந்த பெண். இதையடுத்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர். மேலும், அவரது செல்போன், கம்ப்யூட்டரில் இருந்த பெண்ணின் நிர்வாண வீடியோக்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், “நான் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். ஒரு வருஷத்துக்கு முன்பு, என்னுடன் ஸ்கூலில் ஒன்றாக படித்த பெண்ணை சந்தித்தேன். இருவரும் காதலித்தோம். வாட்ஸ்அப் காலில் பேசி வந்தோம். அந்த பெண்ணின் சில வீடியோக்களை என் லேப்டாப்பில் சேர்த்து வைத்திருந்தேன்.
வேறு சில வீடியோக்களையும் எனக்கு அனுப்ப சொல்லவும் அவளும் எனக்கு அனுப்பினாள். திடீரென எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது. அவள் என்னுடன் பேசவே இல்லை. போனையும் பிளாக் பண்ணிவிட்டாள். அதனால் நேரில் போய் பார்த்தேன். அப்போதும் என்னுடன் பேசவில்லை. அதனால் ஆத்திரம் அதிகமாகி அவளை பழிவாங்க நினைத்தேன். அதனால் அவளுடைய வீடியோக்களை அவளது சொந்தக்காரர்களுக்கே வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்
