ஆதிக்கம் செலுத்தும் இளம் இயக்குனர்கள்.. அண்டை மாநிலத்திற்கு ஓட்டம் பிடிக்கும் முன்னணி இயக்குனர்கள்

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. இதனால் முன்னணி இயக்குனர்கள் பலரும் வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களில் எடுத்துப்பார்த்தால் தமிழ் சினிமாவுக்கு பெரிய அளவு லாபம் சம்பாதித்துக் கொடுத்த படங்களை எடுத்தவர்கள் பெரும்பாலும் இளம் இயக்குனர்களாக தான் இருக்கின்றனர்.

மேலும் முன்னணி நடிகர்களின் பார்வையும் இளம் இயக்குனர்கள் மீது விழுந்து உள்ளதால் தற்போது முன்னணி இயக்குனர்கள் பலரும் தங்களுடைய அடுத்தப்பட வாய்ப்பு தமிழில் கிடைக்காமல் தெலுங்குக்கு படையெடுத்து கொண்டிருக்கின்றனர்.

h-vinoth-lokesh
h-vinoth-lokesh

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இளம் இயக்குனர்களாக லோகேஷ் கனகராஜ், எச் வினோத், தேசிங்கு பெரியசாமி போன்ற பலரும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர். முக்கியமாக அரைத்த மாவையே அரைக்காமல் இருப்பதும் இவர்களது வெற்றியில் குறிப்பிடவேண்டிய ஒன்று.

முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலரும் இன்னும் கமர்சியல் பார்முலாவை கட்டி அழுது கொண்டிருக்கின்றனர். இதனால் முன்னணி நடிகர்கள் பலரும் இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதால் தற்போது முன்னணி இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் வேலை இல்லாமல் போய்விட்டது.

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே கமர்சியல் படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவிலிருந்து ஷங்கர், லிங்குசாமி, மோகன்ராஜா போன்ற பல தமிழ் இயக்குனர்கள் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க சென்று விட்டனர்.

இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று தான் சொல்லவேண்டும். இனியும் கமர்சியல் படங்களை நம்பாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படமெடுக்கும் இயக்குனர்களால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என நம்பலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்