Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

இளம் வீரரை சூப்பர் ஸ்டார் என்ற வாட்சன்! தோனி என்ன சொன்னார் தெரியுமா?

இந்த ஐபிஎல் 2020 புதிய சீசன் அந்தோ பரிதாபம் என சொல்லும் அளவுக்கு சென்றுவிட்டது சி எஸ் கே டீம்மின் பெர்பார்மன்ஸ். தீவிர ரசிகர்களே வெறுத்து போகுமளவுக்கு இருந்தது டீம்மின் முயற்சிகள். மீதி ஏழு டீம்களும் பிளே ஆப் ஆட வாய்ப்புள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே இதுவரை வெளியேறிய அணி.

வயது மூத்த வீரர்களை வைத்து கலக்கி வந்த டீமிற்கு, போட்டிகளை மாற்றியது பெரிய சவாலாக அமைந்து விட்டது. சீதோஷன நிலை, வீரர்கள் பிட்னஸ் என தடுமாறிவிட்டனர். மேலும் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என வாய்ப்புகளையும் அதீதமாக வழங்கவில்லை.

எனினும் கடைசி இரண்டு போட்டிகளில் ருத்ராஜ் கைக்கவாட், மிச்சேல் சான்டனர் என அசதி வருகின்றனர். அதிலும் கைக்கவாட் துவக்க வீரராக இறங்கி அடுத்தடுத்து இரண்டு 50 அடித்து அசத்தியுள்ளார். இந்தியா ஏ டீமில் கலக்கியவர், அழுத்தம் காரணமாக முதல் மூன்று வாய்ப்புகளை கோட்டை விட்டு வெறும் 5 ர்ன் மட்டுமே அடித்தார். தற்பொழுது தரமாக விளையாடி வருகிறார்.

watson gaikwad

இவரை பற்றி வாட்சன் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் உருவாக்கி வருவதாகவும் சொல்லியுள்ளார்.

“அவர் அமைதியாகவும் முழு கவனத்துடனும் உள்ளார். அதேபோல் அவர் ஷாட்களை முன்பே திட்டமிடுவது இல்லை. பந்து வருவதை பார்க்கிறார், அதற்கு ஏற்ற மாதிரி செயல்பட்டு எப்படி அடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். அவருடன் ஆடுவது ஆனந்தமாக உள்ளது. சிஎஸ்கே ரசிகர்களும் கொண்டாடுவதற்கு காரணம் கிடைத்து விட்டது. சிஎஸ்கே அணியில் இளம் வீரர் ஒருவர் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து வருகிறார்,” என சொல்லியுள்ளார்.

கைக்கவாட் பேசுகையில், ” இதே போல தொடர்ந்து ஆடி, டீமுக்கு மேட்சை வென்று தர வேண்டும். வேறு எதுவும் முக்கியமில்லை. அடுத்த போட்டியை ஜெயித்து அடுத்த சீசனுக்கு இந்த உத்வேகத்தை கொண்டு செல்ல வேண்டும். ட்ரெஸ்ஸிங் ரூம் சூழல் சிறப்பாக உள்ளது. நாங்கள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டோம் என்று கூட நம்ப முடியவில்லை. அந்தளவுக்கு முதல் போட்டியும் சரி, இன்றும் சரி அதே போல அமைதியான சூழலே உள்ளது. இது மிக பெரிய பிளஸ் ஆக உள்ளது,”

csk Ruthuraj Gaikwad

தோனி பேசுகையில் “அதிக திறமை வாய்ந்த வீரர்களில் ஒருவர் அவர். அதிகம் பேசாத வீரர் அவர், எனவே நிர்வாகம் அவரை பாதைக்கு கொஞ்சம் கடினம் ஆகிவிட்டது. ஒரு முறை பேட்டிங்கில் அடிக்க ஆரம்பித்ததும், அவருக்கு ஏற்ற ஷாட்களை அடித்து விளையாட ஆரம்பித்து விட்டார்.” என சொல்லியுள்ளார்.

சற்றே லேட் ஆன வாய்ப்பாக அவருக்கு இது அமைந்தாலும், ருத்ராஜ் ஜடேஜா, ரெய்னா போல சிறந்த வீரராக சி எஸ் க் டீமில் இடம் பிடிப்பார் என்பது மட்டும் உறுதி. வாழ்த்துக்கள் கைக்கவாட்.

Continue Reading
To Top