Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாழ்நாளில் தளபதி விஜய்யுடன் ஒரு படமாவது நடித்து விட வேண்டும்.. 30 வயது இளம் நடிகையின் தீராத ஆசை

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போதைக்கு அதிக வியாபாரம் உள்ள நடிகராக இருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் வெளியான மெர்சல், பிகில், சர்கார் போன்ற படங்கள் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். வருகிற பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து விஜய் தளபதி 65 படத்தில் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலிப்குமாருடன் இணைய இருப்பதாக தகவல்கள் வந்தது. ஆனால் சமீபத்தில் விஜய் அட்லியை சந்தித்ததாகவும் ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

இப்படி தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக இருக்கும் தளபதி விஜய்யுடன் வாழ்நாளில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என 30 வயது நடிகை தீவிர ஆசையுடன் இருக்கிறாராம்.

அவர் வேறு யாரும் இல்லை. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா தான். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு மொழி சரளமாக தெரியும் என்பதால் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறாராம்.

raashi-khanna-cinemapettai

raashi-khanna-cinemapettai

ஆனால் கண்டிப்பாக தளபதி விஜய்யுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம். விஜய்யுடன் ஒரு படம் நடித்து விட்டால் தன்னுடைய மார்க்கெட் வேற லெவலுக்கு உயரும் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் ராஷி கண்ணா.

Continue Reading
To Top