விஜய் ஆண்டனி கூட எல்லாம் யார் நடிப்பா? சீன் போட்ட பப்ளிமாஸ் நடிகை

இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக உருவெடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. ஆரம்பத்தில் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தார்.

அதிலும் பிச்சைக்காரன் படம் எல்லாம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் 50 கோடி வசூல் சாதனை செய்து மாஸ் காட்டியது. ஆனால் யார் இவருக்கு மாஸ் ஹீரோ ஆசை காட்டியது என்று தெரியவில்லை. மாஸ் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு இருந்த மார்க்கெட்டையும் இழக்கும் நிலைமைக்கு ஆளானார்.

தொடர்ந்து சில படங்களில் நடித்து மார்க்கெட்டை குறைத்துக் கொண்ட விஜய் ஆண்டனி தன்னுடைய பிளஸ் பாயிண்ட் எது என்பதை தெரிந்து நடித்த கொலைகாரன் படம் வெற்றி பெற்று அவரை மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

அதைத் தொடர்ந்து தக்கவைக்க விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து அக்னிச் சிறகுகள், கோடியில் ஒருவன் போன்ற படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கோலிசோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்திலும் புதிதாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தன்னுடைய படங்களில் பிரபலமான நடிகைகளின் ஜோடியாக்க முயற்சி செய்யும் விஜய் ஆண்டனி இந்த படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்க கேட்டாராம். ஆனால் ஹன்சிகாவோ, வேண்டுமானால் விஜய் ஜோடியாக நடிக்கிறேன், விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்க முடியாது என படக்குழுவினரை திருப்பி அனுப்பிவிட்டாராம்.

இதனால் அப்செட்டான படக்குழு அடுத்த ஹீரோயின் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் தடுமாறி வரும் ஹன்சிகா வந்த படத்திற்கும் வேட்டு வைத்துக் கொண்டாரே என கோலிவுட்டில் கிண்டல் செய்கிறார்களாம்.

hansika-cinemapettai
hansika-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்