Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாராவை ஓரங்கட்டிய பிரபல இளம் நடிகை.. புயல் வேகத்தில் உயரும் சம்பளம்
நயன்தாராதான் தற்போதைக்கு தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகை என அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் அப்படியெல்லாம் நினைத்து விடாதீர்கள் என புயல் வேகத்தில் முன்னிலையில் வந்து கொண்டிருக்கிறார் பிரபல இளம் நடிகை.
தற்போதைக்கு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். நாலு கோடியாக இருந்த சம்பளத்தை தற்போது எட்டு கோடியாக மாற்றி விட்டதாக தகவல்கள் வெளியானது.

nayanthara-cinemapettai-01
இந்நிலையில் அவரையே தூக்கி சாப்பிட வந்துவிட்டார் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ரஷ்மிகா மந்தனா அடுத்ததாக தமிழில் கார்த்தியுடன் சுல்தான் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

rashmika-mandanna-cinemapettai
இப்போதைய சூழ்நிலையில் சுல்தான் படம் OTTயில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அப்படி வெளியானால் கண்டிப்பாக அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் ரஷ்மிகா மந்தனாவுக்கு பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் தனது சம்பளத்தை 3.5 கோடியில் இருந்து ஒரேயடியாக 10 கோடியாக ஏற்றி விட்டாராம் ரஷ்மிகா. பாலிவுட் நடிகைகளுக்கு அடுத்தபடியாக தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறிவிட்டார் ரஷ்மிகா.
இதனால் நயன்தாராவின் முதலிடம் பறிபோய்விட்டதாம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக இன்னமும் தான் தான் நம்பர் ஒன் என கோலிவுட்டில் வடை சுட்டுக் கொண்டிருக்கிறாராம் நயன்தாரா.
