Connect with us
Cinemapettai

Cinemapettai

actress

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

நடிச்சது நாலு பிட்டு படம், ஆனா உன்சீன் தாங்க முடியல.. இளம் நடிகையை வெளுத்து விட்ட தயாரிப்பாளர்

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கும் தமிழ் நடிகை ஒருவர் சமீபகாலமாக முன்னணி நடிகை ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பதை வெளுத்து வாங்கியுள்ளார் பிரபல தயாரிப்பாளர்.

காதல் குறும்படம் ஒன்று மூலம் பிரபலமான அந்த நடிகை தற்போது தமிழ் சினிமாவில் அடிமட்ட இளம் ஹீரோக்களுக்கு ஹீரோயினாக நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மார்க்கெட் இல்லாத நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நாயகியாக வலம் வருகிறார்.

அதிலும் சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரின் தந்தை இயக்கத்தில் நடித்த கதாநாயகி, குடும்ப குத்து விளக்கு என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து விட்டார்.

பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு முன்னாடி இதே மாதிரி ஒரு படத்தில்தான் அநியாயத்திற்கு தனது முன்னழகை படம் போட்டு காட்டி நடித்திருக்கிறார்.

நடித்த ஒரு படமும் ஓடவில்லை என்றாலும் கிடைக்கும் பட வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஆனால் அந்த நடிகை சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் முன்னணி நடிகையாகி விட்டோம் என நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.

இதனால் தான் ஆரம்ப கால கட்டத்தில் நடித்த சிறிய படம் ஒன்றின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட வரமுடியாது என பந்தா காட்டுகிறாராம். இதனால் டென்ஷனான தயாரிப்பாளர் நடிகையை பொதுமேடையில் வெளுத்து வாங்கிவிட்டார்.

முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள உனக்கு எவ்வளவு பந்தாவா என அந்த தயாரிப்பாளர் பேசியதைக் கேட்டு குமுறி குமுறி அழுது இருக்கிறாராம் நடிகை.

Continue Reading
To Top