Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-1

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

திருமணத்தை தள்ளி போடும் இளம் நடிகை.. காரணம் அந்த இளம் நடிகருடன் உள்ள நெருங்கிய நட்பு தானாம்!

தமிழ் சினிமாவுக்கு என்றே கேரள மாநிலத்தில் கடவுள் பெண்களை அதிகமாக படைத்து விட்டார் போல. தொடர்ந்து அங்கிருந்து வருடத்திற்கு 10 நடிகைகள் குறைந்தது தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி மலையாள சினிமாவில் வெளிவந்த ஒரு காதல் படத்தில் அறிமுகமான அந்த இளம் நடிகை அதன் பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

வந்த புதிதிலேயே நடிப்பு நாயகன் படத்திலும், ஒல்லிபிச்சான் நடிகர் படத்திலும் வாய்ப்பு கிடைக்க விறுவிறுவென முன்னுக்கு வருவார் என எதிர்பார்த்தாராம். நேரம், அந்த நடிகர்களுடன் நடித்த படம் பெரிய அளவில் அவரை கொண்டு சேர்க்கவில்லை.

இதற்கிடையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அவ்வப்போது ஒரு படங்களில் நடித்து வரும் அந்த இளம் நடிகை மலையாள தேசத்தில் சிறந்த பாடகியாகவும் வலம் வருகிறார்.

இது ஒருபுறமிருக்க சமீப காலமாக அந்த நடிகை ஒரு இளம் நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் அவரிடம் கேட்காமல் எதுவுமே செய்ய மாட்டாராம்.

அப்படி அந்த நடிகர் கொடுத்த அறிவுரையில் சில முக்கிய படங்களை தவற விட்டு விட்டாராம். இருந்தாலும் நான் இருக்கிறேன் என அவர் அரவணைத்துக் கொண்டதில் அப்படியே கரைந்து உருகி விட்டாராம் அந்த இளம் நடிகை.

இது தெரிந்த அவரது குடும்பம் எப்படியாவது அந்த நடிகைக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் நடிகையோ சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்று தெரிவித்தாராம்.

இதை கேட்ட அவரது குடும்பம், இதையே தான் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்க என கிண்டல் அடிக்கிறார்களாம். அந்த இளம் நடிகர் உடன் இருக்கும் நெருக்கத்தை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் நடிகை ஓட்டம் பிடித்து விடுவாராம்.

Continue Reading
To Top