Connect with us
Cinemapettai

Cinemapettai

hari-vikram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரம், ஹரி படத்தில் சீயானுக்கு ஜோடியாகும் பிரபல இளம் நடிகை? அருவா படத்தை அப்படியே எடுக்குறாங்க போல!

சாமி ஸ்கொயர் படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குனர் ஹரியின் சினிமா கேரியர் கொஞ்சம் ஆட்டம் கண்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்து முன்னணி நடிகர்கள் அவரை ஒதுக்கி வருவதை பார்க்க முடிகிறது.

ஒரு காலத்தில் மார்க்கெட்டை இல்லாத நடிகர்களுக்கு தன்னுடைய கமர்சியல் படங்களால் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவர்களது சினிமா கேரியரில் முக்கிய இயக்குனராக இருந்தவர் தான் ஹரி.

சூர்யா, விக்ரம் போன்றவர்களுக்கு கமர்சியல் ஹீரோவாக பெரிய வெற்றியை தேடித்தந்த ஹரியின் படங்களில் சமீபகாலமாக இருவரும் நடிக்க தயங்கி வருகின்றனர். அதற்கு காரணம் சிங்கம் 3 மற்றும் சாமி ஸ்கொயர் போன்ற படங்கள்தான்.

மிகவும் மட்டமான திரைக்கதை அமைப்பில் உருவான இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் சுத்தமாக எடுபடவில்லை. இதனால் சூர்யா மற்றும் ஹரி இருவரும் இணைய இருந்த அருவா படம் கூட ட்ராப் ஆனது குறிப்பிடத்தக்கது.

அருவா படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்காததால் அருவா படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதனை தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து ஹரி ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் கிடைத்தது.

ஆனால் தற்போது மீண்டும் ஹரி, விக்ரம் உடன் கூட்டணி சேர உள்ளாராம். அருவா படத்தின் கதையை அப்படியே விக்ரமை வைத்து எடுக்க உள்ளாராம். மேலும் அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ராஷி கண்ணா அதே கதாபாத்திரத்தில் விக்ரமுடன் நடிக்க உள்ளாராம்.

raashi-khanna-cinemapettai

raashi-khanna-cinemapettai

விரைவில் ஹரி மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள்.

Continue Reading
To Top