Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூத்த இயக்குனரின் கட்டுப்பாட்டில் இளம் நடிகை.. அதையும் மீறி இளம் நடிகருடன் நெருக்கமாம்
தமிழ்சினிமாவில் கருத்து சொல்லும் இயக்குனராக இருந்து வருபவர் அந்த பிரபல இயக்குனர். சமீபகாலமாக இயக்குனர் தொழிலை விட்டுவிட்டு நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தற்போது பிரபல நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தமிழ் நடிகை ஒருவருக்கு கதை தேர்வில் அவ்வப்போது உதவி பண்ணி வருகிறாராம் அந்த பிரபல இயக்குனர். அதேபோல் அந்த நடிகையும் தன்னை தேடி எந்த கதை வந்தாலும் முதலில் இயக்குனருடன் கலந்து ஆலோசித்து விட்டு தான் ஓகே சொல்கிறாராம். இயக்குனரும் தமிழ்நாட்டு பொண்ணு எனக்கருதி பல வாய்ப்புகளை கொடுத்து வருகிறாராம்.
ஆனால் சமீபகாலமாக நடிகையின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை என கடும் அப்செட்டில் இருக்கிறாராம் அந்த இயக்குனர். சமீபத்தில் ஒரு நடிகருடன் இரட்டை அர்த்த படத்தில் நடித்த பிறகு அந்த நடிகையின் போக்கு மட்டம் ஆகிவிட்டதாம். பத்தாததுக்கு இந்த நடிகையின் நண்பியான பிரபல நடிகையின் காதலரை ஒரே படத்தில் கவுத்திவிட்டாராம் இந்த இளம் நடிகை.
அந்த நடிகருக்கும் இவர் மீது ஒரு கண்ணு தானாம். அதனால்தான் தனது அடுத்த படத்திலும் இதே ஹீரோயின் வேண்டும் என அடம் பிடித்து சேர்த்திருக்கிறார். சாதாரணமாகவே நடிகர் படப்பிடிப்பு தளங்களில் சும்மாவே இருக்க மாட்டார் என நடிகரைப் பற்றி தயாரிப்பாளர்கள் புலம்பியது அனைவரும் அறிந்ததே.
தன்னுடைய பழைய காதலியுடன் ஒரே ரூமில் கூத்தடித்ததெல்லாம் தற்போது இந்த இளம் நாயகியுடன் தொடர்கிறதாம். இதனை அறிந்த அந்த இயக்குனர் இவரை எச்சரித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் நடிகை கேட்கிற மாதிரி தெரியவில்லை என இயக்குனர் ஒதுங்கி விட்டாராம்.
நல்ல பொண்ணு என்ற இமேஜை கெடுத்துகாதே என இயக்குனர் எச்சரித்தாலும் அந்த நடிகருடன் நெருக்கம் எல்லைமீறிச் சென்று வருகிறதாம். பத்தாததுக்கு அவரது ரசிகர்கள் செல்லம், டார்லிங், ஏஞ்சல் என கொஞ்சுவதால் புகழ் போதையில் தன்னையறியாமல் சுற்றி வருகிறாராம் அந்த இளம் நாயகி.
என்னத்தச் சொல்ல. சினிமா என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து அளவில்லாமல் செல்கிறது.
