இந்த லோகத்துல எவனையுமே நம்ப முடியல.! பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது இளம் நடிகை அந்தரங்க புகார்!

யூடியூப் சேனலில் இந்திய அளவில் பிரபலமான நபராக இருக்கும் யூடியூபர் ஹர்ஹா சாய் மீது நடிகை ஒருவர் அந்தரங்கப் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஹர்ஷா சாயின் பாலோயர்களும், அவரது ரசிகர்களும் பெரும் அதிர்ச்சிடைந்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்களின் கனவு மற்றும் லட்சியம் எதுவென்று கேட்டால் அரசு அதிகாரிகள், மருத்துவர், ஆசிரியர் ஆக வேண்டும் என்று கூறுவதைப் போல் தற்போது, யூடியூப் சேனல் தொடங்க வேண்டும், ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக, யூடியூப்பில் தனக்கேன சேனல் தொடங்கி லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்ஸுடன், லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் படிக்கும் மாணவர்களே கூட கூறி வருகின்றனர்.

அந்த வகையில் யூடியூப்பில் கன்டென்டு உருவாக்கி விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுவது தொழிலாகவே பார்க்கப்படுகிறது. இதில், பிரபல யூடியூபராக இருப்பவர் ஹர்ஷா சாய். இவர் ஆந்திரம் மாநிலத்திலுள்ள விஜயநகரத்தைச் சேர்ந்தவர் ஆவார். கல்லூரி முடிந்த பின், உடற்பயிற்சி குறித்த வீடியோக்கள் யூடியூப்பில் பதிவிட்டு வந்த நிலையில், மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக தன்னையும், தன் வீடியோக்களையும் காட்டி மாற்றி யோசித்து புதுமைகளை புகுத்தினார்.

அதன்படி, காரை நாணயங்களாகவே விலை கொடுத்து ஷோரூமில் வாங்குவது.. மிஸ்டர் பீஸ்ட் செய்வது மாதிரி வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி மக்களை தன் வசம் ஈர்த்தார். இதன் வீடியோக்கள் வைரலாகி, அவரது யூடியூப் சேனலில் சப்ஸ்கிரைபர்ஸின் எண்ணிக்கையும் கூடியது. தெலுங்கில் இருந்து தற்போது தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் அவர் பேசுவது போல் டப்பிங் பேசி வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இதில், ஹர்ஷா சாய் தெலுங்கு சேனலில் 1.09 கோடி சப்பிரைபர்ஸ் உள்ளனர். தமிழ் சேனலில் 85.4 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். இந்தியில் 1.55 கோடி சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.

ஸ்ரீபிக்சர்ஸ் பேனரில் மித்ராவ் தயாரிப்பில் ஹர்ஷா சாய் எழுதி இயக்கி நடித்துள்ள மெகா பட த்தின் டீசர் கடந்தாண்டு வெளியான நிலையில், இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் பெருமளவு ரசிகர் பட்டாளத்தையும், சமூக ஊடகங்களில் பாலோயர்களையும் வைத்துள்ள ஹர்ஷா சாய் மீது, டிவி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமான 25 வயது மதிக்கத்தக்க பிரபல நடிகை ஒருவர் ஹர்ஷா சாய் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் தெலுங்கானா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், ‘ஹர்ஷா சாய் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்தரங்க கொடுமை செய்ததாகவும், தகாத புகைப்படங்களை வைத்துக் கொண்டு அதை வெளியிடுவதாக மிரட்டி ரூ.2 கோடி வரையில் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டதாகவும்’ குறிப்பிட்டுள்ளார் என தகவல் வெளியாகிறது.

இப்புகாரின் உண்மைத் தன்மையைப் பரிசோதிக்க வேண்டி, அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என மேற்குறிப்பிட்ட காவல் நிலைய போலீசார் கூறியுள்ளனர். இளம் பெண் புகார் அளித்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்புகாரின் அடிப்படையில் இன்னும் ஹர்ஷா சாய் கைது செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகிறது.

இப்புகார் பற்றி போலீஸார் தரப்பில், ‘ஹர்ஷா மற்றும் நடிகை இருவரின் நண்பர் ஒருவர் வைத்த நிகழ்ச்சியின்போது இருவரும் சந்தித்துக் கொண்ட தாகவும் அதன்பின், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தாகவும் அதன்பின், ஹர்ஷா தன்னை அந்தரங்க கொடுமை செய்து, தனது புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக அப்பெண் கூறியதாக’ குறிப்பிட்டுள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து ஹர்ஷா சாய் விளக்கம் அளிக்க வேண்டுமென்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News