Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸுக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட நாட்டுக்கட்டை இளம் நடிகை.. ஆள விடு சாமி என ஓட்டம் பிடித்த விஜய் டிவி
இந்த ஊரடங்கு சமயத்தில் விஜய் டிவி டிஆர்பி விஷயத்தில் மிகவும் பின் தங்கியுள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படியே போனால் சேனலை இழுத்து மூட வேண்டியதுதான் என தன்னுடைய டிஆர்பி ஆயுதத்தை எடுத்துள்ளது விஜய் டிவி.
பிக்பாஸ் நிகழ்ச்சி வைத்து டிஆர்பி சமாச்சாரத்தை கையாண்டு வந்த விஜய் டிவி தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை துவங்க உள்ளது. இதிலும் வழக்கம்போல் புரியாமல் பேசுவதற்காக கமல் ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோ வீடியோவில் கூட பிக்பாஸ் பற்றி பேசாமல் நாட்டு மக்களுக்கு கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் ஆரம்பமே போர் அடிக்கும் வகையில் ஆரம்பித்துள்ளார் கமல்.
இந்நிலையில் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல இளம் நடிகைகளுக்கு வாய்ப்புகள் சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் சமீப காலமாக இருக்கும் நடிகர்களும் பிக் பாஸ்4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காளி, இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தில் நாயகியாக வலம் வந்தவர் ஷில்பா மஞ்சுநாத். பார்ப்பதற்கே போதையேற்றும் இந்த இளம் நடிகையை எப்படியாவது பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டு வர விஜய் டிவி நிறுவனம் பல முயற்சிகள் செய்துள்ளது.
ஆனால் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அவர் ஒரு கோடி கேட்டது விஜய் டிவி நிர்வாகத்தை அதிர வைத்துள்ளது. இதனால் வேறு ஒரு இளம் நடிகையை களமிறக்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

shilpa-manjunath-cinemapettai
