Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷுக்கு இணையாக அசுரத்தனமாக அசத்திய மூவர்.. இவர்களில் யாருக்கு தேசிய விருது கொடுக்கலாம்
தனுஷ், வெற்றிமாறன், வேல்ராஜ், ஜி வி பிரகாஷ் கூட்டணியில் வெளியாகியுள்ள படமே அசுரன். வெக்கை என்ற நாவலின் தழுவல். பழிவாங்கும் ஆக்ஷன் ட்ராமா படம். வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனுஷ் என்ற நடிகரை பற்றி நாம் விமர்சனம் செய்ய வேண்டியதில்லை, அவரின் திறன் அனைவரும் அறிந்ததே. எனினும் இது போன்ற ஜாம்பவான் அருகில் நின்று சிறுது சொதப்பினாலும் அது படத்தில் பெரிய மைனஸாக தான் தெரியும். தனுஷின் மனைவி ரோலில் மஞ்சு வாரியர், மச்சான் ரோலில் பசுபதி, வக்கீலாக பிரகாஷ் ராஜ் என நடிப்பில் பல மைல்கற்களை கடந்தவர்களை பயன்படுத்தியது லாஜிக்கான ஒன்று தான்.
ஆனால் இப்படத்தில் நாம் பார்க்கவிருக்கும் இந்த மூவரின் பங்களிப்பும் தனுஷுக்கு இணையானதே.
டீஜே அருணாச்சலம் – வேல்முருகன்

Teejay Arunachalam in asuran
பாடகராக இவரை நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் நடிகராக இந்த மிரட்டு மிரட்டுவார் என சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. சிவசாமியின் மூத்த மகன். முருகா கதாபாத்திரம்- தப்பை தட்டிக்கேட்டு, தறிகெட்டு திரியும் இளவட்டத்தை நம் கண் முன்னே கொண்டுவருகிறது. அதுவும் அந்த கழிப்பறை செருப்படி காட்சியில் மிரட்டியிருப்பார் அன்பர். வந்த நேரம் குறைவு என்றாலும் மனதில் நின்றுவிட்டார்.
கென் கருணாஸ் – சிதம்பரம்

asuran
தன் அப்பாவை வெத்து வேட்டாகவும், அண்ணனை கதாநாயகனாகவும் உருவகப் படுத்திய ரோலில் அறிமுகமாகிறார். அண்ணன் இறந்த பின் அப்பாவிடம் கோபம், அம்மாவிடம் அனுதாபம் என கதாபாத்திரத்தின் அழுத்தத்திற்கு ஏற்றது போல ஈடு கொடுத்துள்ளார். அப்பாவை முதலில் வெறுத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அவர் மேல், மதிப்பும் மரியாதையும் வரும் காட்சிகளில் நடிப்பில் பின்னியுள்ளார். இறுதியில் அடிவாங்கும் காட்சியில் தனுஷை ஏக்கப்பாற்வை பார்க்கும் காட்சிகளில் நடிப்பின் உச்சம் . பிஜிலி வெடி சிறுசு தான், ஆனால் அது போடும் சத்தம் எப்படியோ, அப்படி தான் இவரும்.
அம்மு அபிராமி – மாரியம்மாள்

Ammu Abhirami
தனுஷின் பிளாஷ் பேக் பகுதியில் தான் வருவார். முறைப்பெண் வேடம். எதற்கு வெளியே போய் பெண் பார்க்க வேண்டும் என செல்லமாக கோபப்படும் காட்சியிலும், ஊரார் முன் செருப்பை தலையில் வைத்து அடிவாங்கும் காட்சியிலும் வேற லெவல் நடிப்பு. இவரின் நடிப்பு திறன் என்ன என அனைவரும் அறிய நல்ல மேடையாக இப்படம் அமைந்துவிட்டது.
கட்டாயம் இவர்களில் ஒருவருக்கேனும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பதே சினிமாபேட்டையின் ஆசை. ஸ்பெஷல் வாழ்த்தும், பாராட்டும் இந்த மூவருக்கும்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
